Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கவுன்சிலர் கலைச்செல்வியை நாங்கள் பார்த்ததே இல்லை . திருச்சியில் நடைபெற்ற உங்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் குவிந்த பொதுமக்கள் புகார் .

0

'- Advertisement -

திருச்சி பீமநகரில் மாநகராட்சி 51,52 -வது வார்டுகளுக்கு

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நேற்று நடைபெற்றது .

 

மேயர் அன்பழகன் தொடங்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

 

உங்களுடன் ஸ்டாலின் முகாம் திருச்சி மாநகராட்சி வார்டு எண் 51 மற்றும் 52 ஆகிய வார்டுகளுக்கு மேயர் மு. அன்பழகன் தொடங்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்கள்.

 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பொதுமக்கள் நலன் பெறும் வகையில் தமிழக முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை நடத்துவது என திட்டமிட்டு 15. 07 .2025 அன்று கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் துவக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து இந்த முகாம்கள் நாள்தோறும் நடைபெற்று வருகிறது .அதன் ஒரு பகுதியாக மண்டலம் எண். 4, பீமநகர்பகுதி வார்டு எண் 51 மற்றும் 52 வது வார்டுகளுக்கு திருச்சி பீமநகர் பி .எஸ் . எஸ் திருமண மண்டபத்தில் நேற்று உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இந்த சிறப்பு முகாமை மேயர் மு. அன்பழகன் | ஆணையர் மதுபாலன் ஆகியோர் துவக்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்கள்.

முகாமில் உள்ள 13 துறைகளின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, எரிசக்தி துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவை துறை, சிறப்பு திட்ட செயலாக்கு துறை மற்றும் இலவச மருத்துவ முகாம் ஆகிய 43 சேவைகளின் அரங்குகள் அமைக்கப்பட்டு பொதுமக்களிடம் மனுக்கள் பதிவு செய்யப்படுகிறது.

 

தொடர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனு ககளையும் பெற்று அதிகாரிகளிடம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு எடுத்துரைத்தனர் .

 

இந்நிகழ்வில் திருச்சி மாநகராட்சி மண்டலக்குழு தலைவர் துர்கா தேவி,

உதவி ஆணையர் சண்முகம் மற்றும் மேற்கு வட்டாட்சியர் மாமன்ற உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

 

இந்த முகாமில் வழக்கத்துக்கு மாறாக பல நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு.வந்து மனுக்களை அளித்தனர் . முதலில் இரண்டு மூன்று போலீசார் மட்டுமே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் . உங்கள் கட்டுக்கடங்காமல் செல்லவே 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் .

 

இது குறித்து மனு அளித்த சிலரிடம் கேட்டபோது நாங்கள் 51வது வார்டை சேர்ந்தவர்கள் இந்த வார கவுன்சிலர் கலைச்செல்வியை நாங்கள் பார்த்ததே இல்லை . அவர் வீட்டை விட்டு வெளியே வந்ததே கிடையாது அவரது கணவர் கருப்பையாதான் எல்லாமே. பொதுமக்கள் தேவை என்ன குறைகள் என்ன என்று என்றுமே கேட்டது கிடையாது . எங்கள் குறைகளை இன்று அதிகாரிகளை நேரடியாக சந்தித்து மனுக்களை அளிக்க வந்துள்ளோம் . கவுன்சிலர் கலைச்செல்வியின் கணவர் கருப்பையாவுக்கு தனது கறிக்கடை பார்த்துக் கொள்ளவே நேரம் பத்தாது .

இவரது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் ரேஷன் கடைகளில் 5 கிலோ பருப்பு , சர்க்கரை , பாமாயில் ஒசியில் கேட்டு பெற்று வருகிறார் . மாலையில் இவரது சிக்கன் கடையில் சிக்கன் 65 வறுப்பதற்கு ரேஷன் கடைகளில் ஓசியில் வாங்கி செல்லும் பாமாயிலையே உபயோகப்படுத்தி வருகிறார் .

 

 

தெருக்களில் ஆய்வு மேற்கொள்ள வருகிறார் என்று கேட்டதற்கு ஆமாம் வருகிறார் புதிதாக கட்டி வரும் கட்டிடங்கள், இடித்து பராமரித்து புதிதாக கட்டப்படும் வீடுகள் எனத் தேடி சென்று இதே மாதிரி கட்டப்பட்டு வருகிறது என எதையாவது கூறி வாங்க வேண்டியதை வாங்குவதற்காக மட்டும் வருவார் என வேதனையுடன் தெரிவித்தனர் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.