20000 இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலை சம ஊதியம் வேண்டி திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே உண்ணாவிரதம் .
20000 இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலை சம ஊதியம் வேண்டி திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே உண்ணாவிரதம் .
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தினர்.
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தைச் சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு ஒரு நாள் அடையாள உண்ணாவிர போராட்டம் மாவட்டத் தலைவர் சந்தோஷ் குமார் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் கலந்துகொண்டு பேசினார்.இதில் நிர்வாகிகள் நவீன் குமார் ராஜ்குமார், ரங்கராஜ், விஜயராகவன், விஜயகுமார் உள்ளிட்ட ஏராளமானோர்
கலந்து கொண்டனர்.
உண்ணாவிரத போராட்டத்தில் திமுக அரசு பதிவு ஏற்று நான்கு ஆண்டுகள் கடந்தும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள
20,000 இளநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை கலைந்து உரிய ஊதியத்தை இதுவரை வழங்கவில்லை .எனவே 20,000 இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் பலன் கிடைக்க அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துனர். மேலும் வருகிற செப்டம்பர் மாதத்தில் சிறை நிரப்பு போராட்டம் நடத்துவது என்று மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது .
அதற்கு ஆயத்தம் சேர்க்கும் வகையில் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று உள்ளது.