அரசு மருத்துவமனையில் நிலவிவரும் அவலங்களை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றிடும் வகையில்
திருச்சியில் பொதுமக்களிடம் 13 – ந் தேதி முதல் கையெழுத்து இயக்கம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக்குழு தலைவர் பேட்டி.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில் அண்ணல் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையின் நிலை குறித்து நேரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வறிக்கை சம்பந்தமான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று திருச்சி வெண்மணி இல்லத்தில் நடைபெற்றது.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக்குழு தலைவர் எஸ்.ஸ்ரீதர் நிருபர்களிடம் கூறியதாவது :
திருச்சி அரசு மருத்துவமனையில் 1600 படுக்கை வசதியுடன் தினசரி சுமார் 5500 பேர் வரை புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தினசரி 500 பேர் பல்வேறு மருத்துவ பரிசோதனைக்கு பிறகு உள்நோயாளியாக அனுமதிக்கப்படும் நிலை உள்ளது.
மருத்துவமனையில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குழந்தைகள் நல மையம், மகப்பேறு சிகிச்சை, இதய சிகிச்சை, எலும்பு முறிவு சிகிச்சை, சிறுநீரக சிகிச்சை 27 பிரிவான மருத்துவ சேவை மற்றும் 7 தனி ஐசியு கொண்ட மருத்துவமனையாக உள்ளது
ஆனால் வரக்கூடிய இவ்வளவு எண்ணிக்கையிலான நோயாளிகளை கையாள்வதற்கு மருத்துவர்களின் தட்டுப்பாடு மிக அதிகமாக உள்ளது இன்னும் அதிகமாக செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது மருத்துவக் கல்லூரி மாணவர்களை பயிற்சி என்ற பெயரில் அவர்களை கொண்டுதான் முழுமையான அரசு மருத்துவமனை இயங்கக்கூடிய நிலையில் உள்ளது
ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையிலும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் பற்றாக்குறை அதிகமாக உள்ளது மதியம் 12.30 மணி வரைதான் மருத்துவமனை செயல்படுகிறது அதன் பிறகு எவ்வித மருத்துவ கவனிப்பும் கிடையாது என்பது போன்ற நடைமுறையில் மருத்துவமனைகளில் உள்ள குறைப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் கவனிக்க வேண்டும்.
பத்து நோயாளிக்கு ஒரு செவிலியர் என்ற நிலை என்பது திருச்சி அரசு மருத்துவமனையில் கிடையாது. ஒரு வார்டுக்கு ஒரு செவிலியர் அல்லது இரண்டு செவிலியர் என்ற நிலையில் தான் தற்பொழுது செயல்படுத்தப்பட்டு வருகிறது காலை மதியம் இரவு என மூன்று சிப்ட்களில் செவிலியர்கள் பணியாற்றுகின்றனர் இதில் காலை சிப்ட்களில் மட்டும் ஓரளவு செவிலியர்கள் உள்ளனர் மற்ற இரண்டு சிப்ட்களில் செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது இதனால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகும் நிலை உள்ளது இதனால் நோயாளிகளுக்கு தரமான மருத்துவ சேவை என்பது கிடைக்காமல் அவதிப்படும் நிலை உள்ளது.
மருத்துவமனையில் எந்த நோயாக இருந்தாலும் பாராசிட்டமால் மாத்திரை மட்டுமே தருவதாக நோயாளிகள் குற்றம் சாட்டுகின்றனர் இன்னும் நோயாளிகள் தங்களின் மருத்துவ தேவை நிறைவேறவில்லை என கேட்கும் போது அதற்கான மாத்திரைகளை இங்கே தர முடியாது வெளியே வாங்கி தாருங்கள் என எழுதி கொடுத்து வாங்கும் அவல நிலை உள்ளது. வி~க்கடி மருந்துகள் முறையாக கையாளப்படுவதில்லை நோயாளிகள் அலைக்கழிக்க படுகின்றனர். சர்க்கரை நோயாளிகள், இரத்த அழுத்த நோயாளிகளுக்கு மாதந்திர மருந்துகள் முழுமையாக கொடுப்பதில்லை குறைத்தே கொடுக்கின்றனர் மருத்து வழங்குமிடம் அதிகமான நோயாளிகள் வருகையால் மணிகணக்கில் வரிசையில் நிற்க வேண்டிய நிலை உள்ளது ஊழியர்களை அதிகப்படுத்தி கவுண்டர்களை அதிகப்படுத்தப்பட வேண்டும்.
நோயாளிகள் பயன்படுத்திய மெத்தை உறை, தலையணை உறை போன்றவை துவைத்து சுத்தப்படுத்தப்படுவதாகவே தெரியவில்லை ஒரே நோயாளி பயன்படுத்திய அதையே மற்ற நோயாளிகளும் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டே இருக்கக்கூடிய அவல நிலை உள்ளது.
மருத்துவமனையில் கழிவறைக்கு பயன்படுத்தக் கூடிய தண்ணீருக்கு மிகப்பெரிய தட்டுப்பாடு உள்ளது.
இதனால் கழிவறை பயன்படுத்திய பிறகு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதால் சுத்தமாக பராமரிப்பதில் சிரமம் ஏற்படுவதாக நோயாளிகள் கூறுகின்றனர் குறிப்பாக ஒரு குவளை தண்ணீர் நிரம்புவதற்கு பல மணித்துளிகள் ஆவதால் கழிவறையை சுத்தப்படுத்த முடியாததால் கழிவறைக்கு உள்ளே சென்று வர முடியாத அளவிற்கு சுகாதார பிரச்சனை ஏற்படுவதாக நோயாளிகள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. இன்னும் வார்டுகளில் அதிகமான துரு நாற்றம் வீசுகிறது. பெருச்சாளிகளின் தொல்லை அதிகமாக உள்ளது
குடிநீர் மற்றும் வெண்ணீர் தயாரிப்பதற்கான இயந்திரங்கள் பல இடங்களில் இருந்தும் அது செயல்பாட்டில் இல்லாமல் பழுதடைந்து உள்ளது இதனால் வெளியே உள்ள உணவக வளாகங்களில் வரும் குடிநீர் குழாய்களில் தண்ணீர் பிடிக்கும் அவலம் உள்ளது. உடனடியாக அதை சரி செய்து தொடர்ந்து பராமரிக்க கூடிய பணி செய்திட வேண்டும்.
டயாலிஸ் நோயாளிகள் எண்ணிக்கை பெருகி வரும் சூழலில் படுக்கை வசதி குறைவாக உள்ளது. இதனால் சிகிச்சையில் காலதாமதம் ஏற்படுகிறது. படுக்கை வசதியை அதிகப்படுத்த வேண்டும். டயாலிஸ் நோயாளிகளுக்கு ஒரு நபருக்கு 150 முதல் 200 லிட்டர் வரை சுத்தமான ஆர்.ஓ குடிநீர் வேண்டும் பல நேரங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதால் டயாலிஸ் செய்வதே தள்ளிப் போகும் சூழ்நிலை உருவாகிறது.
சிறுநீரக நோய், இதய அறுவை சிகிச்சை மற்றும் விபத்துகளால் ஏற்படும் பாதிப்பு உள்ளிட்டவைகளுக்கு நரம்பு நாள இணைப்பு சிகிச்சை என்பது திருச்சி அரசு மருத்துவமனையில் இல்லாததால் தஞ்சை மருத்துவமனைக்கு இங்குள்ள நோயாளிகளை பரிந்துரைத்து அனுப்பி வைக்கும் சூழல் உள்ளது
புற்றுநோய்க்கான கீமோ தெரபி, கதிரியக்க சிகிச்சை போன்றவற்றிற்கும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதில்லை
உயர்தர இருதய அறுவை சிகிச்சைக்கான வசதிகள் இல்லை
காப்பீடு திட்டத்திற்கான வழிமுறைகளை நோயாளிகளிடம் தகுந்த ஆவணங்களை பெற்று காப்பீட்டு நிறுவனங்களுக்கு கொடுத்து உரிய சிகிச்சை பெற்றிட உதவிடும் வகையில் வார்டுகளில் பணியாற்றக்கூடிய மேனேஜர் இல்லாததால் பயிற்சி மாணவர்களைக் கொண்டு மேற்கொண்ட பணி மேற்கொள்ளப்படுகிறது இதனால் பெரும் காலதாமதம் ஏற்படுகிறது.காப்பீடு திட்டங்களை பயன்படுத்தி சிகிச்சை செலவினங்களை விட கூடுதலாக காப்பீடு பணத்தை பெறுவது போன்ற முறைகேடுகள் நடக்கின்றன.
மகப்பேறு மருத்துவ வார்டுகளில் போதுமான படுக்கை வசதிகள் கிடைக்காமல் பிரசவித்த தாய்மார்கள் தரையில் படுக்க வைக்கும் அவலங்கள் தொடர்ந்து கொண்டுள்ளது
இந்த வார்டுகளில் பணியாற்றும் ஊழியர்கள் ஆண் குழந்தை பிறந்தால் 2000 முதல் 3000 வரையும் பெண் குழந்தை பிறந்தால் 1000 முதல் 2000 வரையும் கையூட்டு கேட்டு தொந்தரவு செய்வதும் அங்கு வாடிக்கையாக உள்ளது
உணவுகள் தயாரிக்கப்படும் சமையல் அறைகள் சுகாதாரமான முறையில் சுத்தம் செய்யப்படுவது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது மேலும் உணவுகள் தரம் இல்லாமலும் சுவையில்லாமலும் இருப்பதாகவும் கூறப்படுகிறது உணவு கொண்டு வந்து கொடுப்பவர்கள் கீழ் உள்ள தளங்களில் மட்டுமே கொடுக்கப்படுகிறது மேல் தளங்களில் உள்ள நோயாளிகள் கீழே சென்று வாங்குவதில் சிரமம் ஏற்படுவதால் உணவு மற்றும் பால் வாங்காமல் விட்டுவிடும் நிலையும் உள்ளது இதனை போக்கிட அனைத்து வார்டுகளிலும் உணவு கொண்டு சென்று உறுதி செய்திட வேண்டும்
மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக வரக்கூடிய நோயாளிகளுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளாமல் பல நாட்கள் இழுத்தடிக்கப்படும் சூழல் உள்ளது ஒன்று காப்பீடு திட்டத்தின் ஒப்புதல் பெறுவதற்காக காலதாமதமும் மருத்துவர்களின் தேதி கிடைக்காமல் காலதாமதமும் ஏற்படுவதாக நோயாளிகள் கூறுகின்றனர் இதனால் பல நோயாளிகள் வலிகளுக்கும் இன்னலுக்கும் ஆளாகும் சூழல் உள்ளது.
ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகளுக்கு பல நாட்கள் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது
மனநல மருத்துவ சிகிச்சைக்கு டாக்டர்கள் இல்லாமல் பராமரிப்பதற்கான ஊழியர்களும் இல்லாமல் பல நோயாளிகள் துணி கூட இல்லாமல் பராமரிப்பு இல்லாமல் அப்படியே கிடக்கும் நிலை உள்ளது
நோயாளிகளை அழைத்துச் செல்லும் பேட்டரி கார்கள் சரிவர இயக்கப்படாமல் காட்சி பொருளாக நிறுத்தப்பட்டுள்ளது இதனை செயல்படுத்தினால் பல நோயாளிகள் பயன்பெறுவார்கள்
பிணம் கூராய்வு செய்வதற்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு குறைந்தது 2000 முதல் 3000 வரை லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வேலை செய்வது என்ற எழுதப்படாத விதி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து பின்பற்றி வரக் கூடிய அவல நிலை உள்ளது
உறுப்பு தானம் பெறப்பட்டு நோயாளிகளுக்கு உறுப்பு மாற்று சிகிச்சை செய்வதில் பதிவு செய்யப்பட்ட வரிசையில் நோயாளிகளுக்கு உறுப்புகளை வழங்காமல் ஊழல் முறைகேடுகளில் மருத்துவர்கள் ஈடுபட்டு தனக்கு வேண்டியவர்களுக்கு உடனடியாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
திருச்சி அரசு மருத்துவமனையில் நிலவிவரும் அவலங்களை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றிடும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைகளின் சார்பில் வருகின்ற ஜூலை 13-ந் தேதி முதல் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் இயக்கத்தை நடத்திட உள்ளோம்.
5 லட்சம் கையொப்பங்கள் பெற்று வருகின்ற ஜூலை 21-ந் தேதி கையொப்பம் பெற்ற மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் இயக்கமாக நடத்திட உள்ளோம் என்றார். பேட்டியின் போது மாநகர் மாவட்ட செயலாளர் கோவி.வெற்றிச்செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பா.லெனின், எஸ்.ரேணுகா, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சேதுபதி ஆகியோர் உடனிருந்தனர்.

