அரசியலில் தினமும் ஏதாவது புதுசாக பொய் சொல்ல வேண்டும் என திருச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. நடிகர் அருண் பாண்டியன் பேட்டி
அரசியல் ரொம்ப டஃப் ஜாப் தினமும் ஏதாவது புதுசாக பொய் சொல்ல வேண்டும் என திருச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. நடிகர் அருண் பாண்டியன் பேட்டி
திருச்சி எல்.ஏ. சினிமாஸ் மாரீஸ் திரையரங்கில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் அஃகேனம் திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர் அருண்பாண்டியன், கீர்த்தி பாண்டியன் மற்றும் திரைப்படத்தின் இயக்குனர், இசையமைப்பாளர், எடிட்டர் என படக்குழுவினர் திரையரங்கில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய நடிகர் அருண் பாண்டியன்… இத்திரைப்படம் தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் சமுதாயத்திற்கு தேவையான பல நல்ல விஷயங்களை திரைப்படத்தில் பாடமாக சொல்லாமல் மக்கள் ரசிக்கும் படி கூறியுள்ளோம்.
தற்போதைய இளைய தலைமுறையினர் மற்றும் பெற்றோர்கள் பார்க்க வேண்டிய திரைப்படம் இது என்றார்.
அனைத்து திறமைசாலிகளும் புது முகங்கள் தான் அதனால் தான் புது முகங்களை வைத்து இத்திரைப்படத்தை எடுத்துள்ளோம்.
இளைஞர்களுக்கு வழி விட வேண்டும் என்பதற்காக இந்த படத்தை நான் இயக்கவில்லை திரைக்கதை மட்டும் எழுதியுள்ளேன் மற்ற அனைத்தும் இளைஞர்கள் செய்துள்ளனர் நான் மேற்பார்வையாளராக வாத்தியாராக இத்திரைப்படத்தை இயக்குவதில் இருந்துள்ளேன் என்றார்.
இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் இதே டீமை வைத்து வெளியிடுவோம் என்றார்.
இப்ப திரைப்படத்தை புரமோட் செய்வதில் நாங்கள் நேர்மையாக உள்ளோம் யாரிடமும் பணம் கொடுத்தோ திரையரங்கு சென்று நம் படத்தை பற்றி பெருமையாகவும் மற்ற படங்களை குறைத்தும் பேசு என்கிற வேலையெல்லாம் நான் செய்வதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன். மக்கள் படம் பார்த்து நல்ல படம் என சொல்வதில்தான் படத்தின் வெற்றி உள்ளது.
விமர்சனம் செய்பவர்களின் பேச்சை யாரும் கேட்பதில்லை.
140 திரையரங்குகளில் தற்பொழுது திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது விரைவில் அதிக திரையரங்குகளில் திரைப்படம் திரையிடப்படும் என்றார்.
நாங்கள் திரைத்துறைக்கு வரும் பொழுது எங்களை யாரும் மதிக்கவில்லை வெற்றியை கொடுத்தால் தான் மதிப்பார்கள்.
பெயர் வைக்காத சில திரைப்படங்களில் நடித்து வருகிறேன்.
இயக்குனர் கூறும் பொழுது … தான் பார்த்து கதை சொன்ன இரண்டாவது தயாரிப்பாளர் இவர்தான் அவர் ஓகே சொன்னதன் பேரில் படத்தை இயக்கினேன் என்றார்.
கதாநாயகி கீர்த்தி பாண்டியன் கூறும் போது அடுத்து இரண்டு படங்களில் நடித்து வருகிறேன் விரைவில் அது குறித்த அறிவிப்பு வெளிவரும் கண்டிப்பாக எனது தந்தையுடன் இல்லை என்றார்.
நான் அனைத்து விதமான கதாபாத்திரங்களும் செய்வேன் எனக்கு கதை பிடித்திருந்தால் நிச்சயம் அனைத்து கதாபாத்திரத்திலும் நடிப்பேன் என்றார்.
நேற்று வரை அரசியல் வேண்டாம் என்றேன் நாளை அரசியலுக்கு வந்தால் நீங்கள் வேண்டாம் எனக் கூறுவீர்களா
அரசியலைப் பற்றி நான் தற்போது சிந்திக்கவில்லை நாம் எதிலும் குதிப்பதில்லை இருந்து நம்மை தள்ளி விடுகிறார்கள்
அரசியல் ரொம்ப டஃப் ஜாப் தினமும் ஏதாவது புதுசாக பொய் சொல்ல வேண்டும் அது நம்மால் முடியாது என்பதால் அரசியல் வேண்டாம் என்றார்.
விஜய் அரசியலுக்கு வருவது பற்றி நான் யோசிக்கவில்லை அவர் பாட்டுக்கு அவர் வேலையை செய்யட்டும் நாம் நமது படத்தை பற்றி பேசுவோம் என்றார்.
நடிகர்கள் மட்டுமல்ல சாதாரண மக்களாக இருந்தாலும் போதை தப்பு தப்பு தான். இந்த திரைப்படத்திலும் போதையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசி உள்ளோம் என்றார்.
மகளாக கீர்த்தி பாண்டியன் நடிப்பு எப்படி உள்ளது என கேட்டபோது… நான் என் பெண்ணை பற்றி பேசி அவர் என்னைப் பற்றி பேசி இருவரும் சேர்ந்து குடும்பத்தை பற்றி பேசி என வந்துவிடும். நீங்கள் தான் அவர் எப்படி நடிக்கிறார் என கூற வேண்டும்.
தொடர்ந்து நல்ல கதை அம்சம் உள்ள படங்களில் நடிப்பேன் என அருண்பாண்டியன் தெரிவித்தார்.
2015 முதல் மேடை நாடகங்களில் நான் நடித்து வருகிறேன் நிறைய ஆடிஷன்கள் சென்றுள்ளேன் என கீர்த்தி பாண்டியன் தெரிவித்தார்.
இணைந்த கைகள் பார்ட் 2 வருமா எனக் கேட்டபோது… ராம்கி என்னிடம் கூறி வருகிறார் இருவரும் சேர்ந்து ஏதாவது செய்ய வேண்டும் என கூறுவார், இந்த வயதில் ஓடியாடி ஜம்ப் செய்வது கஷ்டம் அதை வேறு ரூபத்தில் செய்யலாம் இந்த வயதில் என்ன செய்ய முடியுமோ அதை செய்யலாம் என்றார்.