மருத்துவமனைகளில் இறப்புச் சான்றிதழைப் பெறுவதற்காக பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
மருத்துவமனைகளில் இறந்தவர்களின் விவரங்களை உடனுக்குடன் இணையதளத்தில் பதிவு செய்யாததால் இறப்புச் சான்றிதழ் கிடைக்காமல் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
வங்கி முதலீடுகள், காப்பீடுகள் மற்றும் அரசின் நிவாரணங்களைப் பெற இந்தச் சான்றிதழ் அவசியம். இதனால், அரசு உடனடியாக இதைக் கவனிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.