திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பொன்மலை கோட்டம்- வார்டு எண் . 46 பொதுநிதி 2020-21ன் கீழ்
பெரிய மிளகுபாறை , வேடுவர் தெருவில் ஆழ்துளை கிணற்றுடன் கூடிய தரைமட்ட மின் மோட்டாரின் கூடிய தண்ணீர் தொட்டியை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
ஆழ்துளை கிணற்றுடன் கூடிய தரைமட்ட தண்ணீர் தொட்டி அமைக்கும் பணி நிதி – பொதுநிதி 2020-21 – மதிப்பீடு – ரூ .2.90 இலட்சம் – ஆழ்துளை கிணற்றின் ஆழம் : 121.50 மீ ( அல்லது ) 398.5 அடிகள் ஆழ்துளை கிணற்றின் விட்டம் – 6 ” Dia நீர்மூழ்கி மோட்டாரின் திறன் – 1.5 HP – PVC டேங்கின் கொள்ளளவு – 2000 லிட்டர்.
பயன்படுத்தும் குடும்பங்களின் எண்ணிக்கை – சுமார் 200 குடும்பங்கள் பயன்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு,மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன்,நகர பொறியாளர் அமுதவல்லி, செயற்பொறியாளர்கள் சிவபாதம்,குமரேசன்,
மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, முன்னாள் துணை மேயர் அன்பழகன், பகுதி செயலாளர்கள் மோகன்தாஸ், கண்ணன், முன்னாள் கவுன்சிலர் ராமமூர்த்தி, புஷ்பராஜ், பி.ஆர்.பாலசுப்பிரமணியன், ப.மூவேந்திரன், கவிதா மாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.