திருச்சி ஸ்ரீரங்கத்தில் வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டு மண்டையை உடைத்த வாலிபர் .
ஸ்ரீரங்கம் மூலதொப்பு நைட்டு சாயல் டெப்போ ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் ராஜா (வயது 37) இவரது மனைவி அகிலா (வயது 33. )
இந்த தம்பதியருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மணிகண்ட ராஜாவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது, மேலும் மதுவுக்கு அடிமையான மணிகண்ட ராஜா அவ்வப்போது மனைவி அகிலாவிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்து வந்தார். நேற்று வழக்கம் போல் மது குடிக்க பணம் கேட்டார். இதில் கணவன், மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது இதில் ஆத்திரமடைந்த மணிகண்ட ராஜா மரக்கட்டையால் மனைவியின் தலையில் அடித்தார். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது இதையடுத்து உறவினர்கள் அதை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் இது குறித்து அகிலா கொடுத்த புகாரின் அடிப்படையில் கணவர் மணிகண்ட ராஜா மீது ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.