திருச்சி புத்தூரில் கட்டுக்கட்டாக பணத்துடன் சிக்கிய 2 லாட்டரி வியாபாரிகள்.
செல்போன்களும் சிக்கியது.
திருச்சி புத்தூர் நான்கு ரோடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக உறையூர் போலீசாருக்கு ரசசிய தகவல் வந்தது.இதை அடுத்து உறையூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் தலைமையிலான போலீசார் அங்கு ரோந்து சென்று தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது புத்தூர் நான்கு ரோடு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நான்கு பேரை பிடித்து விசாரிக்க முற்பட்டனர்.
அதில் இரண்டு பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடி விட்டனர்.இரண்டு நபர்களை சுற்றி வளைத்து பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் உறையூரை சேர்ந்த தனபால் (வயது 54), உறையூரை சேர்ந்த சரவணன் (வயது 44) என்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து கட்டு கட்டாக ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 600 ரூபாய் பணம் மற்றும் இரண்டு செல்போன்கள் சிக்கியது.மேலும் பரிசுகள் தருவதற்காக துண்டு சீட்டில் எழுதி வைத்த ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பி ஓடிய விவேக், சிவா ஆகிய இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.