பொறியியல் பட்டதாரிகளுக்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு வரும் 11ம் தேதி வியாழக்கிழமை கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் 11ம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலி பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியிடங்கள் : 20
மாதச்சம்பளம் : இன்ஜினியர் (தரக்கட்டுப்பாடு) பணிக்கு மாதம் ரூ.84,000 சூப்பர்வைசர் (தரக்கட்டுப்பாடு) பணிக்கு மாதம் ரூ.45,000 வரை
கல்வித்தகுதி :
இன்ஜினியர் பணிக்கு மெக்கானிக்கல், புரொடக்ஷன், மெட்டலர்ஜி, கெமிக்கல் துறைகளில் முழுநேர இளங்கலை பொறியியல் பட்டம் அல்லது வேதியியலில் முதுகலை அறிவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சூப்பர்வைசர் பணிக்கு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 22 முதல் 35 வயது வரை
அரசு விதிமுறைகளின்படி, SC/ST, OBC மற்றும் PwBD பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பக்கட்டணம் : இந்த வேலைக்கு விண்ணப்பிக்க எந்தவித கட்டணமும் கிடையாது.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி : ஜூன் 11
கூடுதல் தகவல்கள் மற்றும் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் BHEL இணையதளமான [https://careers.bhel.in/] இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்ய வேண்டும். தேவையான சான்றிதழ்களை இணைத்து அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி :
“Sr. Manager / HR – IR & Rectt.,
HR department,
24 Building,
BHEL,
Thiruverumbur,
Tiruchirappalli – 620014” என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.