Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: தமிழக முழுவதும் மது ஒழிப்பை முன்னெடுக்கும் வகையில் மது மறுப்பு மக்கள் இயக்கம் துவக்கும்.

0

'- Advertisement -

மாநில அரசுக்கு மது விற்பனையில் வரும்

 

வருமானத்தை ஒன்றிய அரசு வழங்க வேண்டும்

 

மது மறுப்பு மக்கள் இயக்கத்தினர் கோரிக்கை.

 

மது மறுப்பு மக்கள் இயக்கத்தின் சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரஸ் கிளப்பில்

செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

 

இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் அமைப்பின் செயல் திட்டங்கள் குறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் .

 

தமிழக முழுவதும் மது ஒழிப்பை முன்னெடுக்கும் வகையில் மது மறுப்பு மக்கள் இயக்கம் துவக்கப்பட்டுள்ளது.

 

ஒன்றிய மற்றும் மாநில அரசு மது ஒழிப்புக்கு முன்னெடுப்பு வேண்டும்,

மதுவை அகற்றுவதற்கான அதிகாரத்தை ஒன்றிய அரசு தனது கையில் வைத்துள்ளது.

ஒன்றிய அரசு உடனடியாக முதலமைச்சர் மாநாட்டை கூட்டி மது அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநில அரசை நடத்துவதற்கு பணம் இல்லாததால் மது விற்பனையை நடத்துவதாக முதலமைச்சர் தெரிவிக்கின்றனர்.

எனவே, ஒன்றிய அரசு மாநில அரசிற்கு இழப்பு ஏற்படுத்தும் நிதி தொடர்பாக நிதி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மாநிலங்களில் மதுவை ஒழிக்க ஒருங்கிணைந்த திட்டத்தை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் சுமார் 40 கிராமங்கள் மதுவிலிருந்து முழுமையாக ஈடுபட்டுள்ளதாக ஆய்வில் தெரிய உள்ளது. அதற்கான அரசும் விருதுகள் வழங்கியுள்ளது.

தமிழக அரசும், மதுவிலக்கு காவல்துறைகளும் ஒருங்கிணைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மது ஒழிப்பை மேற்கொள்ளும் வகையில் சுய உதவிக் குழுக்கள், எங்களுடைய அமைப்பை தமிழக அரசு இணைத்து ஒருங்கிணைந்த குழு அமைக்க வேண்டும்.

ஒவ்வொரு கிராமங்களில் ஏற்கனவே செயல்பட்டு வரும் தன்னார்வ குழுக்களோடு இணைந்து எங்களது அமைப்பும் மதுவை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளும்.

தேவைப்பட்டால் நீதிமன்றம் செல்வோம்.

முதலாவது பொதுமக்கள், மற்றும் பெண்களை ஒருங்கிணை மக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் என தெரிவித்தார்.

 

பேட்டியின் போது திருச்சி சௌந்தர்ராஜன், பெரியசாமி மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.