திருச்சி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உத்திரப்பிரதேச பாஜக அரசை கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.
திருச்சியில் உத்திரப்பிரதேச பாஜக அரசை கண்டித்து
மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது
.
உத்திர பிரதேசத்தில் வாரணாசி மாவட்டத்தில் பொதுத்துறை நிறுவனமான மின் துறையை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பதை எதிர்த்து கடந்த இரண்டு மாதமாக மின்வாரிய தொழிலாளர்களும், பொறியாளர்களும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். போராட்டம் நடத்துபவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய உத்தரபிரதேச பாஜக அரசு போராட்டம் நடத்தக்கூடிய தலைவர்களை, பொறியாளர்களை குண்டர் சட்டத்தின் கைது செய்வது, முக்கிய நிர்வாகிகளை வீட்டு காவலில் வைப்பது, இரவு நேரத்தில் வீடுகளில் சோதனை செய்வது, குடியிருப்பு பகுதிகளில் மின் இணைப்பு, குடிநீர் துண்டிப்பு செய்வது என்ற மிகப்பெரிய அடக்குமுறை செய்கிறார்கள். எனவே உத்தரபிரதேச மின்வாரிய தொழிலாளர்கள், பொறியாளர்கள் மீது அடக்கு முறையை ஏவி விடும் பாஜக அரசை கண்டித்தும், அடக்கு முறையை உடனடியாக கைவிட்டு போராடும் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த கோரியும் நாடு முழுவதும் மின்சார தொழிலாளர்கள், பொறியாளர்கள் மின்வாரிய அலுவலகம் முன்பு நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் ஒரு பகுதியாக திருச்சி தென்னூர் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு.
மாநில துணை தலைவர் எஸ்.ரெங்கராஜன் தலைமை தாங்கினார். தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம்
ஆரோக்கியசாமி,
சிவ செல்வன், எம்ளாய்ஸ் பெடரேஷன்
பாலசுப்பிரமணியன், இன்ஜினியர் சங்கம். மற்றும். பழனியான் டி, நடராஜன், பிரசன்னா ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். இறுதியாக இன்ஜினியர் சங்கம் ரெங்கநாதன். நன்றி கூறினார். இதே போன்று ஆர்ப்பாட்டம் துறையூர் அய்யம்பாளையம். வெள்ளனூர் அரியமங்கலம். மணப்பாறையில் பிரிவு அலுவலகம் முன்பு நடைபெற்றது..