சாமானிய மக்கள் நலக் கட்சியின் ஆலோசனை கூட்டம். இன்று செவ்வாய்க்கிழமை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் திருச்சி. சாமானிய மக்கள் நல கட்சியின் ஆலோசனைக் கூட்டமும் உறுப்பினர் சேர்க்கை முகாமும் நடைபெற்றது . இக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் குணசேகரன் தலைமை ஏற்றார் . சாமானிய மக்கள் நல கட்சியின் மாவட்ட பொருளாளர் ஜோசப் அவர்கள் முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில் 33 பேர் திமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து விலகி சாமானிய மக்கள் நல கட்சியில் இணைந்தனர் . பீம நகரைச் சேர்ந்த வீரமணி அவர்களும் சாமானிய மக்கள் நல கட்சியில் இணைந்தார். திராவிட முன்னேற்ற முன்னேற்றக் கழக சிறுபான்மை பிரிவு திருச்சி மாவட்ட பொறுப்பாளர் ரசூல் திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து விலகி சாமானிய மக்கள் கட்சியில் இணைந்தார். இக்கட்சியின் தலைவர் உரையாற்றும் போது தமிழகத்தில் தற்போது மணல் குவாரிகளை திறப்பதற்கு அரசு அனுமதித்து உள்ள நிலையில் மணல் குவாரிகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் . மேலும் தற்போது இயற்கை வளங்களை சுரண்டும் கனிம வள கொள்ளையர்களையும் கண்டிப்பதாக அறிவித்தார் .