தேவர் ஜெயந்தி விழா மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
தேவர் ஜெயந்தி விழா மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், சுதந்திர போராட்டவீரர் ஐயா. முத்துராமலிங்கத்தேவர் திருமகனார் அவர்களின், 113வது தேவர் ஜெயந்தி குருபூஜையை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட அலுவலகத்தில், திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர், அன்பில் மகேஸ் பொய்யாமொழி எம்எல்ஏ தலைமையில், அவரது திருவுருவப் படத்திற்கு கழக நிர்வாகிகளுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதை தொடர்ந்து திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேவர் அவர்களின் திருவுருவப்படத்திற்கும் மற்றும் திருச்சி ஜங்ஷன் அருகில் உள்ள தேவர் அவர்களின், திருவுசிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என். சேகரன், வண்ணை அரங்கநாதன், கோவிந்தராஜ், ஒன்றிய, பகுதி, நகர, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.