Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி உறையூரில் கணவன் பணம் தராததால் இளம் மனைவி மாயம்

0

'- Advertisement -

உறையூரில்

தனியார் பஸ் கண்டக்டரின் இளம் மனைவி மாயம்.

 

திருச்சி உறையூர் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன் இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 22) மோகன் திருச்சியில் உள்ள தனியார் பேருந்தில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் மோகன் தனது மாமியாரிடம் ரூபாய் இரண்டு லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் சம்பவத்தன்று மனைவி முத்துலட்சுமி ரூபாய் 2 ஆயிரம் பணத்தை மோகனிடம் கேட்டதாக தெரிகிறது.அதற்கு அவர் மறுத்ததன் காரணமாக கடந்த 10 ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது கணவர் மோகன் உறையூர் காவல் நிலைய போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். அப்புகாரின் பேரில் உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.