ஆக்கிரமிப்பை அகற்றி சாலை வசதி ஏற்படுத்தி கொடுத்த 57 வது வார்டு கவுன்சிலர் முத்து செல்வத்தை கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டிய 2 பெண்கள்.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் நல்லதண்ணீர் கேணித் தெருவில் 39 வருடமாக இருந்த பிரச்சனைக்கு சட்ட போராட்டம் நடத்தி வெற்றி கண்டு பொதுபாதை ஆக்கிரமிப்பை அகற்றி
சிமெண்ட் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால்
அமைத்து கொடுத்த
திருச்சி 57 வது வார்டு மாமன்ற உறுப்பினரும், திருச்சி மாநகராட்சி நிதிக்குழு தலைவருமான
முத்துச்செல்வம் மற்றும்
மாநகராட்சி வழக்கறிஞர், நி.செகனாஸ் பேகம் மற்றும்
மாநகராட்சி அதிகாரி பெருமக்கள் அனைவருக்கும் அப்பகுதி குடியிருப்பு பொதுமக்கள் அனைவரும் நன்றி தெரிவித்துக் கொள்ள நிலையில்
அந்த ஆக்கிரமிப்பில் உள்ள ஒரே ஒரு வீட்டில் உள்ள பெண்கள் இருவர் மட்டும் தங்கள் பகுதியில் சாலை அமைக்க வந்த ஒப்பந்ததாரர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டி மண்ணை வாரி தூற்றி அடித்து விரட்டி அடித்து உள்ளார். மேலும் அப்பகுதியில் போடப்பட்ட சாலைகளையும் உடைத்து எடுத்து உள்ளனர்
இதை அறிந்த அந்த வார்டு கவுன்சிலர் முத்துச்செல்வம் அப்பகுதிக்கு சென்று அந்த இரு பெண்களிடமும் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என கேட்டதற்கு அந்த இரு பெண்களும் கவுன்சிலர் முத்து செல்வத்தை ஆபாச வார்த்தைகளால் காது கூசும் வகையில் திட்டி உள்ளனர்.
அவர்கள் ஆபாசமாக பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது . ஆனால் கவுன்சிலர் செய்த நல்ல காரியங்கள் வெளியே தெரியவில்லை . இது குறித்து கவுன்சிலர் முத்து செல்வதை தொடர்பு கொண்டு கேட்டபோது கடந்த 39 வருடமாக எந்த வசதியும் இல்லாத பகுதியில் நீண்ட சட்ட போராட்டத்திற்கு பின் சாலை வசதி ஏற்படுத்திக் கொடுத்தது அப்பகுதி ஆக்கிரமிப்பில் உள்ள ஒரே ஒரு வீட்டில் குடியிருக்கும் இரண்டு பெண்களுக்கு எரிச்சலை உண்டாக்கி உள்ளது இதனால் அவர்கள் இவ்வாறு நடந்து கொண்டு உள்ளனர் எனக் கூறினார்.
ஆபாசமாக பேசிய பெண்கள் இருவர் மீதும் காவல்துறையில் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் .