திருச்சி வெவ்வேறு சம்பவங்களில் கல்லூரி மாணவி உள்பட 3
பெண்கள் மாயம்.
போலீசார் விசாரணை.
திருச்சி லால்குடி புது தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாலச்சந்தர்.இவரது மனைவி ரேவதி (வயது 33 ) இந்த தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பு

பாலச்சந்தர் உடல் நல குறைவால் திடீரென இறந்து விட்டார்.
அதன் பின்னர் ரேவதி திருச்சி ஏர்போர்ட் சந்தோஷ் நகரில் வசிக்கும் தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார். அதன் பின்னர் வீட்டிலிருந்து திடீரென மாயமாகிவிட்டார். இது குறித்து அவரது தந்தை பெருமாள் ஏர்போர்ட் போலீசில் புகார் செய்தார். ஏர்போர்ட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2.திருவானைக்காவல் வெள்ளி திருமுத்தம் நேதாஜி தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 59 ) கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் வெளியே சென்ற கிருஷ்ணவேணி. பின்னர் வீடு திரும்பவில்லை இது குறித்து அவரது கணவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
3.தஞ்சாவூர் பட்டுக்கோட்டை திருச்சிற்றம்பலம் துறவி காடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல் இவரது மகள் பிரியதர்ஷினி ( வயது 20) இவர் திருச்சி சிந்தாமணி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வந்தார் சம்பவத்தன்று விடுதியில் தங்கியிருந்த மாணவி வழக்கம் போல் கல்லூரிக்கு புறப்பட்டுச் சென்றார் பின்னர் அவர் மாலை விடுதி திரும்பவில்லை இதுகுறித்து அவரது தந்தை பழனிவேல் கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.