திருச்சி புத்தூரில் போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது

திருச்சி புத்தூர் நடு வண்ணாரப்பேட்டை மாரியம்மன் கோவில்தெரு பகுதியில் சிலர் போதை மாத்திரைகள் விற்பனை செய்து வருவதாக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையத்து சப் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையில் அரசு மருத்துவமனை காவல் நிலையம் போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அப்பொழுது இரண்டு வாலிபர்கள் சந்தேகத்துகிடமாக நின்று கொண்டு இருந்தனர். அவர்களை போலீசார் பிடிக்க முயன்ற போது அதில் ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பிறகு பிடிபட்ட நபரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்தபோது அதே பகுதியை சேர்ந்த சதாசிவம் (வயது 20 ) என்பது தெரிய வந்தது.மேலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய போது போதை மாத்திரை விற்பனை செய்ய வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சதாசிவத்திமிடருந்து இருந்து போதை மாத்திரை மற்றும் சிரஞ்சி போன்ற பொருட்களை பறிமுதல் செய்து உள்ளனர். இது குறித்து திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து சதாசிவத்தை கைது செய்துள்ளனர். தப்பி ஓடிய புத்தூர் பகுதியை சேர்ந்த ரஸ்கான் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.