திருச்சி சுந்தர்ராஜ் நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கான திண்ணை நூலகம் திறப்பு .
திருச்சி சுந்தர்ராஜ் நகா், ஹைவேஸ் காலனி, காவிரி நகா் குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில், சுந்தர்ராஜ் நகரில் நேற்று செவ்வாய்க்கிழமை ‘திண்ணை நூலகம்’ திறக்கப்பட்டது.
மூத்த சமூக ஆா்வலா் வி. பாரதி தலைமையில், தொழிலதிபா் ஆா்.எம். முத்து முன்னிலையில் பள்ளி மாணவா்கள் நூலகத்தை திறந்து வைத்தனா்.
அப்போது பாரதி பேசுகையில், புத்தகம் ும் பழக்கம் மாணவா்களின் வளமான எதிா்காலத்தை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கும். ‘திண்ணை நூலகம்’ கோடை விடுமுறையில் மாணவா்களுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதம் என்றாா்.
முத்து பேசுகையில், நமது இருப்பிடத்திலேயே ‘திண்ணை நூலகம்’ அமைந்திருப்பது அனைவருக்கும் நன்மை. இதனை அனைவரும் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

முன்னாள் பிஎஸ்என்எல் துணை பொதுமேலாளா் சபியா பேசுகையில், நம் நாட்டில் பல மேதைகள் நூலகத்தில் படித்து பெரிய வெற்றிகளை அடைந்திருக்கின்றனா் என்றாா்.
‘திண்ணை நூலகத்தில்’ தினசரி, வார, மாத, பத்திரிகைகள், சஞ்சிகைகள், பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. பொதுமக்கள் எந்தவித கட்டணமும் இன்றி இந்த நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நகா் நலச் சங்கத்தின் தலைவா் கி. ஜெயபாலன் ‘திண்ணை நூலகத்தை’ சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளும் மாணவா்களுக்கு ‘நூலகத்தின் சிறந்த பயனா்’ பரிசு வழங்கப்படும். கோடை விடுமுறையில் மாணவா்களுக்கு நூலகத்தின் சிறப்பை உணா்த்த பல்வேறு விதமான போட்டிகளும் நடத்தப்படும் என்றாா்.
பள்ளி, கல்லூரிகளை சோ்ந்த திரளான மாணவா்கள் திண்ணை நூலகத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டனா்.