Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திமுக தெற்கு தொகுதி என கூறி தெரு மின்விளக்குகள் கூட ஒதுக்காத திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் . பாதிப்பது பொதுமக்கள் மட்டும் அல்ல திமுகவும் தான்.

0

'- Advertisement -

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வது வார்டில் கவுன்சிலராக தீவிர மக்கள் பணியாற்றி வருபவர் பொன்மனைப் பகுதி செயலாளர் கொட்டப்பட்டு தர்மராஜ்.

 

திமுக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான மகேஷ் பொய்யாமொழியின் தொகுதிக்கு உட்பட்ட வார்டுகளில் உள்ள பெரும்பான்மையான கவுன்சிலர்களின் வார்டுகளில் அதிக நிதியும் ஒதுக்கப்படுவதில்லை எந்த பணியும் நடைபெறவில்லை, என கூறப்பட்டு வந்த நிலையில் இதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

48 வது வார்டு சுப்பிரமணியபுரம் வள்ளுவர் தெரு பகுதியில் தெரு விளக்கு பத்து நாட்களாக எரியவில்லை என கூறி கவுன்சிலர் கொட்டப்பட்டு தர்மராஜிடம் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று புகார் கூறப்பட்டது . அடுத்த சில நிமிடங்களில் பேசிய மாநகராட்சி ஊழியர் உடனடியாக மாற்றி அல்லது பழுது நீக்கி தருகிறோம் எனக் கூறினார். பல்பை கழட்டி சென்று நான்கு நாட்கள் ஆகிவிட்டது என கேட்டபோது மாநகராட்சியிலேயே பல்புகள் இல்லை என கூறினார் அந்த ஊழியர் . இது குறித்து மாமன்ற உறுப்பினரிடம் மீண்டும் கேட்டபோது பல்புகள் இல்லை என்றால் நான் என்ன செய்ய முடியும் நீங்கள் நிரூபத்தானே மேயரிடம் கேளுங்கள் என கூறினார் , இன்று மாமன்ற கூட்டம் முடிந்து மேயர் அறையில் இருந்த அன்பழகனை சந்திக்க சென்ற போது மேயரின் பாதுகாவலர் எதற்காக மேயரை சந்திக்க வேண்டும் என கூறினார் தெருவிளக்குகள் எரியவில்லை அது பற்றி கூற வேண்டும் எனக் கூறிய போது உள்ளே சென்று மேயரிடம் கேட்டுவிட்டு குறை தீர்க்கும் கூட்டத்தில் வந்து பாருங்கள் இப்போது மேயரை சந்திக்க முடியாது என உள்ளே அனுப்ப அனுமதி மறுத்து விட்டார் . உள்ளே மேயர் கவுன்சிலர்கள் நாகராஜ் , போட்டோ கமால் மற்றும் கிராப்பட்டி செல்வம் ஆகியோரிடம் சிரித்து பேசிக் கொண்டே இருந்தார் .

 

கடந்த பட்ஜெட்டில் கூட 48வது வார்டுக்கு கவுன்சிலர் கொட்டப்பட்டு தர்மராஜ் கேட்ட நிதியை ஒதுக்கவில்லை , மக்களுக்கு அவர் உறுதி அளித்த எந்த திட்டங்களையும் அவரால் நிறைவேற்ற அவரால் முடியவில்லை அதற்குக் காரணம் 48 வது வார்டு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொகுதிக்கு உட்பட்ட தெற்கு மாவட்டத்தில் வருவது தான் .

திமுக தில்லை நகர் பகுதி செயலாளரும் கவுன்சிலகரமான நாகராஜ் போன்று மேயரின்  விசுவாசியாக உள்ள வார்டுகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்படுவது வருகிறது

இப்படி மேயர் அன்பழகன் தொடர்ந்து தெற்கு மாவட்டம் எனக்கூறி அந்த வார்டுகளில் மக்கள் நலத் திட்டப் பணிகளை நிறைவேற்ற வில்லை என்றால் பாதிப்படைவது பொதுமக்கள் மட்டுமல்ல 2026 இல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலிலும் இது எதிரொலிக்கும் என 48 வது வார்டு பொதுமக்கள் கூறுகின்றனர் . திருச்சி திமுக தெற்கு மாநகர மாவட்ட வார்டுகளில் உள்ள பொதுமக்கள் அனைவரும் மேயரின் நடவடிக்கையில் அதிருப்தியில் உள்ளனர் எனக் கூறப்படுகிறது .

 

தெற்கு மாவட்டத்தில் உட்பட்ட வார்டுகளில் அதிக நிதி ஒதுக்காதது தனக்கு கமிஷன் வராது என்பதாலா ? அல்லது அந்த வார்டு கவுன்சிலர்களுக்கு பொதுமக்கள் இடையே நல்ல பெயர் ஏற்படும் என்பதாலா ? என்பது தெரியவில்லை.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.