திருச்சியில் போக்குவரத்து மிகுந்த நெடுஞ்சாலைத் துறை இடத்தில் உள்ள ஆபத்தான ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றப்படுமா ? பொதுமக்கள் கேள்வி .
திருச்சி சமயபுரம் டோல்கேட் பகுதியில் 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டமும் போக்குவரத்து மிகுந்தியாக இருக்கும்
இந்த சமயபுரம் ரவுண்டானா வழியாகத்தான் அரியலூர் சிமென்ட் ஏற்றிய கனரக ட வாகனங்கள் அதிகம் வந்து செல்லும்.
இது மட்டுமில்லாமல் சேலம், சென்னை, லால்குடி செல்லும் பேருந்துகள் மற்றும் வாகனங்களும் அதிகம் சென்று வருகின்றது .
தற்போது ரவுண்டானாவை சுற்றி கட்டப்பட்டு உள்ள தனியார் ஹோட்டல்கள் மற்றும் கடைகளும் நெடுசாலைச் துறை இடத்தை ஆக்கிரமித்து கட்டிய கட்டிடங்கள் தான். இப்பகுதியில் வாகன போக்குவரத்திற்கு இடையூறு இந்தக் கட்டிடங்கள் இருந்து வருகிறது .
இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது என்பதும் அனைவரும் அறிந்ததே .

தற்போது இந்த இடத்தில் கடை நடத்தும் நபர் உயர் மின் அழுத்த மின் கம்பங்களை மாற்றி மீண்டும் மக்கள் பயணிக்கும்,
நெடுஞ்சாலைதுறை ரோட்டில் மாற்றி வைப்பதற்கு மின் வாரிய துறை அதிகாரிகளிடமும், நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடமும் மனு கொடுத்து அப்பகுதி காங்கிரஸ் பிரமுகர் மூலம் அழுத்தம் கொடுப்பதாக கூறப்படுகிறது.
தற்போதே மின் கம்பங்கள் ரோட்டில் மக்கள் உயிருக்கு பாதுகாப்பின்றி இருக்கும் சூழலில் மீண்டும் தனியார் கட்டிட ஆக்கிரமிப்பிற்கு ஆதரவாக நெடுஞ்சாலைத் துறை ரோட்டில் மின் கம்பத்தை மாற்றி வைத்தால் இரவு நேரங்களில் பெரும் விபத்து மற்றும் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக அப்பகுதிவாசிகளும், சமூக ஆர்வலர்களும் கூறுகின்றனர் .
இந்த இடத்தில் மின் கம்பத்தை மாற்றி அமைக்க மின்வாரியத்தை சேர்ந்த சில அதிகாரிகள் கடந்த ஒரு வார காலமாக கம்பத்தை மாற்றி வைக்க முயற்சி செய்து வருகிறார்கள் . போக்குவரத்துக்கு இடையூறான இடத்தில் மின்கம்பத்தை மாற்றி வைக்க மின்வாரியத் துறை அதிகாரிகள் முயற்சி செய்வது ஏன்.? வர வேண்டியது வந்து விட்டதா என தெரியவில்லை .
மேலும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகளை பெரும் விபத்துக்கள் நடைபெறும் முன் அகற்றி பொது மக்களுக்கு பாதுகாப்பான பயணத்திற்கு திருச்சி மாவட்ட நிர்வாகமும், நெடுஞ்சாலைத் துறையும், மின் வாரியமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர் .