மருமகள் தற்கொலை முயற்சி. வரதட்சணை கொடுமை செய்த மிளகுபாறை உதவி தலைமை ஆசிரியை மீது வழக்குப்பதியாத பொன்மலை காவல் நிலைய போலீசார் .
திருச்சி பெரிய மிளகுபாறை பள்ளி உதவி தலைமை ஆசிரியர் மகேஸ்வரி வரதட்சணை கொடுமைப் படுத்தியதாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இளம்பெண் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதி .
திருச்சி மாவட்டம் பொன்மலை கணேசபுரம் பகுதியில் வசித்து வருபவர் ராமச்சந்திரன் இவரது மனைவி காந்திமதி (வயது 33) இருவருக்கும் திருமணம் ஆகி 10 ஆண்டு ஆன நிலையிலும் தொடர்ந்து வரதட்சணை கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இவர் கடந்த வியாழன் 27/03/2025 அன்று காலை காந்தி மதியின் மாமனார் முருகையன் மாமியார் லெட்சுமி கணவரின் சகோதரிகள் மகேஸ்வரி, புவனேஸ்வரி ஆகியோர் சேர்ந்து கொண்டு காந்திமதியை கிராமத்தில் இருந்து வந்தவர் வரும் போது என்ன கொண்டு வந்தாய் என கேட்டு வீட்டை காலி செய்ய வேண்டும் என மிரட்டியதுடன் தரை குறைவாக பேசி தாக்க முற்பட்டனர்.
காந்திமதியின் கணவர் ராமச்சந்திரன் ஒரு தனியார் கம்பெனியில் கூலி வேலை செய்து வருகிறார் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தன்னை தற்காத்துக் கொள்ள காந்தி மதி வீட்டிற்குள் சென்று கதவை மூடி கொண்டார்.
அதன் பிறகு வீட்டு கதவை மகேஸ்வரி , புவனேஸ்வரி இருவரும் உடைக்க முற்பட்டுள்ளார் உயிர் பயத்தில் என்ன செய்வது என்று தெரியாத காந்திமதி 15 தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டார். காந்திமதி மயங்கி கிடந்த சத்தம் கேட்டு வந்த அக்க பக்கத்தினர் காந்திமதியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
காந்தி மதியின் கணவருக்கு தகவல் கொடுக்க மருத்துவ மனைக்கு விரைந்து வந்தார் .
தற்போது காந்திமதி அவரச பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். மூன்று நாட்கள் ஆகியும் இதுவரை பொன்மலை காவல் துறை வழக்கு பதிவு செய்யவில்லை என பாதிக்கப்பட்ட தரப்பினர் கூறியுள்ளனர்.