Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சில மணி நேரங்களில் 3 சிறு விபத்துகள். திருச்சி ஜி கார்னர் சர்வீஸ் ரோட்டில் உள்ள பேரிகார்டுகள் உயிர்பலிகள் ஏற்படும் முன் அகற்றப்படுமா ?

0

'- Advertisement -

திருச்சி ஜி. கார்னரில் சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டுமென பல்வேறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தும் கடந்த 11 ஆண்டுகளாக இது நிறைவேறாமல் உள்ளது . ஒவ்வொரு தேர்தலின் போதும் திருச்சி பாராளுமன்ற தொகுதி, திருவெறும்பூர் தொகுதி மற்றும் கிழக்கு தொகுதி வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் அறிக்கையில் சர்வீஸ் ரோடு அமைத்து தரப்படும் எனக் கூறுவது வழக்கம் . தற்போது திருச்சி எம்பி துரை வைகோ கூட ரயில்வே அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சர்வீஸ் ரோடு அமைக்க வாய்ப்புள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டார் . ஆனால் அதற்கு தற்போது வாய்ப்பு இல்லை என கூறப்பட்ட நிலையில் சர்வீஸ் ரோட்டில் அவ்வப்போது சிறு சிறு விபத்துக்கள் நடைபெற்று வந்தன .

 

இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் திடீரென டிவிஎஸ் டோல்கேட் முதல் ஜி. கார்னர் வரை திடீரென சாலையின் நடுவே ஆங்காங்கே பேரிகார்டு வைக்கப்பட்டது . இது விபத்துக்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க போக்குவரத்து காவல்துறை சார்பில் வைக்கப்பட்டு இருந்தாலும் நேற்று இரவே இரண்டு பேர் இருசக்கர வாகனங்களில் எதிர்பாராத விதமாக பேரிகார்டு மற்றும் தடுப்பு சுவரில் மோதி சிறு காயத்துடன் உயிர் தப்பி சென்றனர் .

 

இன்று காலை எட்டு முப்பது மணி அளவில் சாலை ஓரமாக சென்ற வாலிபர் பின்னால் வந்த பஸ்சுக்கு வழிவிட ஓரமாக சென்று சாலையின் ஓரத் தடுப்பில் மோதி முகத்தில் பெரும் ரத்த காயம் ஏற்பட்டது . அக்கம் பக்கத்தில் இருந்த நபர்கள் மற்றும் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் முதலுதவி செய்து அனுப்பி வைத்தனர் .

 

மிகவும் அகலமான சாலை கிடையாது இந்த சர்வீஸ் சாலை . இதில் பேரிகார்டு வைத்திருப்பது மூலம் மேலும் பல பெரிய விபத்துக்கள் மற்றும் உயிர்ப்பலி நடைபெற வாய்ப்புள்ளது .

(வேகமாக வரும் தனியார் பேருந்து வலது பக்கம் ஏறி இடது பக்கம் வளைந்தால் பின்னால் வேகமாக வரும் பேருந்தோ, லாரியோ பேரிகார்டு வைக்கப்பட்டது தெரியாமல் அதில் மோதி பெரும் விபத்து நடைபெற அதிக வாய்ப்பு உள்ளது . இதேபோன்று இந்த சாலையில் இரவு நேரங்களில் பெரும்பாலும் மின்விளக்குகள் எரிவதில்லை கும் இருட்டான சாலையின் ஓரத்தில் நடந்து போவதும் தெரியாது, நடுவில் இருக்கும் பேரிகார்டும் தெரியாமல் உயிர்பலிகள் அதிகம் ஏற்படும் .

எனவே திருச்சி பாராளுமன்ற தொகுதி  உறுப்பினர் துரை வை கோ, கிழக்குத் தொகுதி உறுப்பினர்  இனிக்கோ இருதயராஜ் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் உடனடியாக உரிய ஆலோசனை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.