தமிழகத்தில் டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ஊரில் கண்டித்து நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த முன்னணி தலைவர்கள் பல அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் செய்ததாக கைது செய்யப்பட்டார் .
இந்த நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திருவுருவப்படத்தை பாஜகவினர் ஓட்ட உள்ளதாக தகவல் வெளியானதை தொடர்ந்து பல டாஸ்மாக் கடைகளின் முன் இரண்டு பே போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர் .
இந்த நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை மதுக்கடைகளில் தமிழக முதல்வா் உருவப்படத்தை ஒட்டிய பாஜக பெண் நிா்வாகி நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டார், அவரை விடுவிக்க வலியுறுத்தி பாஜகவினா் காவல் நிலையத்தில் முற்றுகையில் ஈடுபட்டனா்.
மணப்பாறையில் பாஜக நகர துணைத் தலைவராக உள்ளவா் வழக்குரைஞா் ஜெயந்தி கண்ணன். திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை காய்கறி மாா்கெட் பகுதியை அடுத்துள்ள இரு அரசு மதுக்கடைகளுக்கு நேற்று புதன்கிழமை பிற்பகல் சென்று, அங்கு கடையின் விற்பனை பகுதியின் முகப்பில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் உருவப்படத்தை ஒட்டினாா். தவலறிந்து சென்ற மணப்பாறை போலீஸாா் ஜெயந்தியை கைது செய்து காவல்நிலையம் அழைத்து சென்றனா். ஒட்டப்பட்டிருந்த முதல்வா் படங்கள் அகற்றப்பட்டன.
இந்நிலையில் மாலை வரை காவல் நிலையத்தில் பெண் நிா்வாகியை விசாரணையில் வைத்திருப்பதாக கூறி பாஜக நகரத் தலைவா் கோல்டு கோபாலகிருஷ்ணன் தலைமையிலான பாஜகவினா் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஜெயந்தி மீது வழக்கு பதிந்து கைது செய்த மணப்பாறை போலீஸாா், காவல்நிலைய பிணையில் இரவு அவரை விடுவித்தனா்.