SNJ மதுபான ஆலை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சொந்தமானது என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் கிருஷணசாமி பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், “19 மதுபான ஆலைகள் தமிழகத்தில் இருப்பினும், அண்மையில் துவக்கப்பட்ட SNJ நிறுவனத்திடமிருந்து மட்டுமே 90% அளவில் TASMAC கொள்முதல் நடைபெறுவது ஏன்?
ஸ்டாலினின் பினாமியான SNJ நிறுவனத்தின் உரிமையாளர் ஜெயமுருகன்,
கருணாநிதி குடும்பத்திற்கு மிக நெருக்கமானவர் என்பதும்,
அவரது வீட்டிற்கு எதிரே குடியிருந்து வருகிறார் என்பதும்,
கருணாநிதியின் ‘உளியின் ஓசை’ என்ற படத்தின் தயாரிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது” என்று ஷியாம் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.