திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் கள்ள சந்தையில் மது விற்ற 2 பேர் 94 குவாட்டர் மற்றும் பீர் பாட்டில்களுடன் கைது .
மத்திய பஸ் நிலையம் பகுதியில்
கள்ளச் சந்தையில் மது
விற்ற 2 பேர் கைது.
ரூ. 35 ஆயிரம் பறிமுதல்.

திருச்சி, மத்திய பஸ் நிலையம் அருகே கள்ளச் சந்தையில் டாஸ்மாக் மதுபான கடையை மூடிய பின்
மது விற்பனை நடப்பதாக கண்டோன்மென்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் ? கிடைத்தது.
அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர், பின்னர் அங்கு தனியார் ஹோட்டல் அருகே நின்றவர்களிடம் சந்தேகத்தின் அடிப்படையில் கன்டோன்மென்ட் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். இதில் உறையூர், தெற்கு மாதுளங்கொல்லை தெருவைச் சேர்ந்த ரமேஷ் (வயது 55) மற்றும் திருச்சியை அடுத்த மணப்பாறை, வையம்பட்டியைச் சேர்ந்த செல்லதுரை (வயது 55) என்பதும், இவர்கள் அங்கு கள்ளத்தனமாக மது விற்றதும் தெரியவந்தது. பின்னர் 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 92 மது பாட்டில்கள், 2 பீர் பாட்டில்கள் மற்றும் ரூ.35 ஆயிரத்து 480 பணத்தை பறிமுதல் செய்து உள்ளனர்.