திருச்சி உறையூரில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு சாவு
உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை.
திருச்சி உறையூர் கீரைக்கொல்லை தெருவை சேர்ந்தவர் சங்கிலி .இவரது இளைய மகன் ராகுல் (வயது 20 ).திருச்சி காட்டூர் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.எஸ்.சி கணினி அறிவியல் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். சரியாக படிப்பு வரவில்லை. இதனால் ராகுல் மன உளைச்சலில் இருந்து உள்ளார். இந்நிலையில் அவரது சகோதரர் அருண் வீட்டை விட்டு வெளியே சென்றார்.
அப்போது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் ராகுல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரது தந்தை ராஜா கொடுத்த புகாரின் அடிப்படையில் உறையூர் காவல் நிலைய போலீசார் ராகுலின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து சரியாக படிக்க முடியவில்லை என்பதால் உயிரானந்தரா அல்லது காதல் தோல்வி பிரச்சினையால் உயிர் இழந்தாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.