11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 70 வயது தாத்தா மற்றும் வாலிபர் மீது குண்டாஸ். திருச்சி எஸ் பி அதிரடி உத்தரவு .
சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடந்துக்கொண்டே உள்ளது. இது போன்ற பாலியல் குற்றங்கள் வயது வரம்பின்றி, 3 வயது குழந்தை முதல் வயதான பாட்டி வரை பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகின்றனர்.
அதிலும் குறிப்பாக சிறுவயது குழந்தைகளுக்கு நடக்கும் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது.
அந்த வகையில் தற்போது திருச்சி மாவட்டத்தில் சிறுமி ஒருவருக்கு நடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகேயுள்ள கிராமத்தில், கடந்தாண்டு மே 10-ம் தேதி, 11 வயது சிறுமி ஒருவர் வயலில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த சின்ன தம்பி (வயது 70) மற்றும் மதன்(வயது 19) மதன்குமார் (வயது 30) ஆகியோர் அங்கு சென்றுள்ளனர்.
சிறுமி தனியாக இருப்பதை பார்த்த இருவரும், சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அதே கிராமத்தைச் சேர்ந்த மதன் குமார் (வயது 30) என்ற நபர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். மேலும், அந்த வீடியோவை மற்றவர்களிடம் காண்பித்துள்ளார். நடந்த சம்பவம் குறித்து அறிந்த பாதிக்கபட்ட சிறுமியின் தாய், பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதையடுத்து, அவர் சம்பவம் தொடர்பாக 28.12025 அன்று முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து, குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில், திருச்சி மாவட்ட எஸ்.பி. செ.செல்வ நாக ரத்தினம் உத்தரவின் பேரில் சின்னத் தம்பி, மதன் குமார் ஆகிய 2 பேரும் நேற்று முன்தினம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, நிவாரண தொகை வழங்க அரசுக்கு காவல்துறை சார்பில் பரிந்துரையும் செய்யப்பட்டுள்ளது.