திருச்சி மாவட்டத்தில் 131 மையங்களில் 32,094 மாணவர்கள் பிளஸ்-1 தேர்வு எழுதினர். அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு .
பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது.
திருச்சி மாவட்டத்தில்
32 ஆயிரத்து O94 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு. பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு.
தமிழகம் முழுவதும் இன்று பிளஸ் 1 தேர்வு தொடங்கியது.
திருச்சி மாவட்டத்தில் 131 மையங்களில் நடைபெற்றது. இந்த பொதுத்தேர்வை, 106 அரசுப்பள்ளிகள், 71 அரசு உதவி பெறும் பள்ளிகள், 81 தனியார் மெட் ரிக் பள்ளிகள் என 258 பள்ளிகளை சேர்ந்த, 15 ஆயிரத்து 357 மாணவர் கள், 16 ஆயிரத்து 737 மாணவிகள் என மொத்தம் 32 ஆயிரத்து 94 பேர்
32,094 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்
இதில் 392 மாற் றுத்திறனாளி மாணவ, மாணவிகள் அவர்களுக்கான சலுகை அடிப்படையில் தேர்வு எழுதுகின்றனர்.
இவர்களை தவிர, 271 ஆண்கள், 176 பெண்கள் என 447 பேர் 14 மையங் களில் தனித்தேர்வர்களாக எழுத உள்ளனர். இத்தேர்வை கண்காணிக்க மாவட்டம் முழுவதும் 230 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல் நாளான இன்று தமிழ் தேர்வு நடந்தது. இந்த தேர்வுவை மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் எழுதினார்கள்.
திருச்சி இ ஆர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள தேர்வு மையத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக மாணவர்கள் உற்சாகமாக தைரியமாக தேர்வு எழுத தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா தலைமையில், பொது தேர்வுவை ஆய்வு செய்தார்
இன்று தொடங்கிய பிளஸ் 1 தேர்வு வருகிற 27 ந்தேதி வரை நடைபெறுகிறது.

