Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ரயில்வே மருத்துவமனையை ஹெல்த் யூனிட்டாக மாற்றுவதை கைவிடக்கோரி திருச்சி பொன்மலையில் டி.ஆர்.இ.யூ கண்டன ஆர்ப்பாட்டம்.

0

'- Advertisement -

ரயில்வே மருத்துவமனையை
ஹெல்த் யூனிட்டாக
மாற்றுவதை கைவிடக்கோரி
டி.ஆர்.இ.யூ கண்டன ஆர்ப்பாட்டம்.

அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களோடும், மருத்துவமனை நிர்வாகத்தோடும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக திருச்சி ரயில்வே மருத்துவமனைகளின் 29 HOSPITAL ASSISTANT POST களை REDISTRIBUTION செய்து சரண்டர் செய்துள்ள திருச்சி கோட்ட நிர்வாகத்தையும்,
விழுப்புரம் சப் டிவிஷனல்
மருத்துவமனையை
தரம் உயர்த்தி, படுக்கைகளின் எண்ணிக்கையை உயர்த்தாமல், மருத்துவமனை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு பதிலாக வேண்டுமென்றே
முடக்கி
ஹெல்த் யூனிட்டாக
ஆக மாற்றம் செய்து, தொழிலாளர்களையு
ம், ஓய்வு பெற்ற ஊழியர்களையும்
அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கும் நிர்வாகத்தின் செயல்பாட்டை கண்டித்தும்,

சாதாரண உடல்நலக்குறைவு ஏற்பட்டால் கூட
20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மணக்குள விநாயகர் மெடிக்கல் ரெபரல் மருத்துவமனைக்கு விழுப்புரத்திலிருந்து செல்ல வலியுறுத்துவதை கைவிட வேண்டும்,

மருத்துவமனையை
ஹெல்த் யூனிட்டாக
ஆக மாற்றம் செய்வதை கைவிட வேண்டும்.
ரயில்வே
நிர்வாகம் தான்தோன்றித்தனமாக எடுக்கப்பட்டுள்ள முடிவினை கைவிட வலியுறுத்தியும்
டி. ஆர்.இ.யூ சார்பில் இன்று செவ்வாய்கிழமை காலை
பொன்மலை ரயில்வே மருத்துவமனை அருகில்
கண்டன ஆர்ப்பாட்டம்
நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு
பொன்மலை ஓபன் கிளைத் தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தை விளக்கி
டி.ஆர். இ.யூ
கோட்ட த்தலைவர்
சிவக்குமார்,
கோட்டச் செயலாளர்
கரிகாலன்,
உதவி கோட்டத் தலைவர்
பலராம்,
உதவி பொதுச்செயலாளர்கள்
சரவணன்,
ராஜா,
ஓய்வு பெற்றோர் சங்க
ஈஸ்வரதாஸ் ஆகியோர் பேசினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.