Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் போலி ஆவணம் மூலம் ஜிஎஸ்டி கட்டியதாக ரூ.6.50 லட்சம் பெண்ணிடம் மோசடி செய்த 4 பேர் மீது வழக்கு பதிவு .

0

'- Advertisement -

திருச்சியில் போலி ஆவணம் தயாரித்து

ரூ 65 லட்சத்து 50 ஆயிரம் ஜிஎஸ்டி வரி கட்டியதாக மோசடி.

நான்கு பேர் மீது வழக்கு பதிவு.

திருச்சி பாலக்கரை வரகனேரி பகுதியை சேர்ந்தவர் சுமதி (வயது 43) இவர் பாலக்கரை காஜா பேட்டை பகுதியில் மொத்த மருந்து விற்பனை கடை நடத்தி வருகிறார்

Suresh

இவரது கடையில் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் கணக்காளராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை சுமதியின் வங்கி கணக்கில் இருந்து ரூ 65 லட்சத்து 56 ஆயிரத்து 43 ஐ கணக்காளர் ரவிக்கு மொத்த விற்பனை மருந்து கடைக்கு ஜி.எஸ்.டி. வரி கட்டுவதற்காக அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருச்சி இப்ராஹிம் பார்க் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் நிறுவனத்தை சேர்ந்த பாரத்குமார், பிங்கி தேவி மற்றும் ரவி ஆகியோர் இணைந்து போலி ஆவணம் தயாரித்து ஜிஎஸ்டி வரி கட்டியதாக சுமதி மற்றும் ஜிஎஸ்டி அலுவலகத்தில் ஏமாற்றி சமர்ப்பித்து உள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சுமதி திருச்சி நீதிமன்றத்தில் புகார் கொடுத்தார் புகாரின் பேரில் நீதிமன்றம் மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டது.

இதையடுத்து திருச்சி

மாநகர குற்ற பிரிவு போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.