Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மாவட்டங்களுக்கு உள் பயணிக்க இ பதிவு முறை இன்று முதல் அமுல்.

0

தமிழகத்தில் இன்று முதல் மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் பயணிப்பதற்கு ‘இ-பதிவு’ முறை அமுல்.

தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் அதிகரிப்புக்கு ஏற்ப ஊரடங்கு கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவதற்கு ‘இ-பதிவு’ முறை (http://eregister.tnega.org) அமல்படுத்தப்பட்டது.

இந்த சூழ்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் கடந்த 13-ந்தேதி நடைபெற்ற அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனைக்கு ஏற்ப முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடந்த 15-ந்தேதி அமலுக்கு வந்தது.

இந்த உத்தரவில், ‘திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை, முதியோர்களுக்கான தேவை போன்ற மிகவும் அத்தியாவசிய தேவைகளுக்காக மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் பயணம் மேற்கொள்ள ‘இ-பதிவு’ முறை கட்டாயம் ஆகும். இது 17-ந் தேதி (இன்று) காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வரும்’ என்று கூறப்பட்டிருந்தது.

எனவே தமிழகத்தில் இன்று முதல் ‘இ-பதிவு’ முறை கட்டாயம் ஆகியுள்ளது.

இதன் மூலம் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் இருந்து யார், யார் வருகிறார்கள்? என்பதை கண்காணித்து, அதனடிப்படையில் கொரோனா பரவலை தடுப்பதற்கான முயற்சியாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் தீவிரமாக இருந்த நேரத்தில் ‘இ-பாஸ்’ நடைமுறை கொண்டு வரப்பட்டது. ‘இ-பாஸ்’ வாங்க சிரமமான நிலை இருந்தது.

ஆனால் இடைத்தரகர்கள் தலையீட்டால், ‘இ-பாஸ்’ நடைமுறை குளறுபடியானது. இதனால் மக்கள் பரிதவிப்புக்கு ஆளாகினர்.

எனவே தற்போது ‘இ-பதிவு’ என்ற எளிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.