தஞ்சாவூர் குடியிருப்புப் பகுதிகளில் இந்திய கௌர் (Indian Gaur) எனப்படும் காட்டு எருமை நடமாடியதைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
வனத்துறையினர் மூலம் இந்திய கௌர் எருதை கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது.
தஞ்சாவூரில் உள்ள சுங்கந்திடல், கோடியம்மன் கோவில் மற்றும் மாரியம்மன் கோவில் பகுதிகளில் சுற்றித் திரிந்த காட்டெருமை மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த மாட்டை இன்னும் கண்டுபிடிக்க முடியாததால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர். தகவலின் பேரில், மாவட்ட வன அலுவலர் ஆனந்தகுமார், விலங்கை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். உத்தரவின் பேரில் வனக்காப்பாளர் ரஞ்சித், இளையராஜா, ரவி, மணிமாறன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆளில்லா விமானம் மூலம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய கௌர் (Indian Gaur) என்பது உலகின் மிகப்பெரிய காட்டு எருது. இந்தியாவின் காட்டுப்பகுதிகளில் அதிகம் காணப்படும் எருது வகை ஆகும்.
இது மிகவும் பெரியதாகவும், பலம் மிக்கதாகவும் இருக்கும். பாகுபலி படத்தில் பல்வாள் தேவன் அடக்கும் காட்டு எருது கிட்டத்தட்ட இதே இந்திய கௌர் (Indian Gaur) தோற்றம் கொண்டது ஆகும். ஆண் கௌர் எருதுகள் 1000 கிலோ வரை எடையுள்ளது.
மிகப்பெரிதாக.. கிட்டத்தட்ட யானையின் முக்கால் அளவில்.. கருத்த உடலுடன், பெரிய கொம்புகளும், வெள்ளை கால்களும் கொண்டது ஆகும் இந்த இந்திய கௌர்.

பொதுவாக இந்திய கௌர் (Indian Gaur) அடர்ந்த காடுகளிலும், மலையிலுள்ள பசுமை நிலங்களிலும் வாழும் விலங்கு ஆகும். இது இந்திய கௌர் (Indian Gaur) என்று அழைக்கப்பட்டாலும் இந்தியா, நேபாளம், மியான்மார் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் இது காணப்படும்.
பார்க்க யானை போல.. பெரிதாக, கொடூரமாக இருக்கும் இது மிகவும் ஆக்ரோஷமானது. கோபமானது ஆகும். அதே சமயம் இந்திய கௌர் (Indian Gaur) ஒரு சைவ உண்ணி (Herbivore) என்பதும் குறிப்பிடத்தக்கது. பசுந்தழை, இலைகள், பழங்கள் போன்றவற்றை உணவாக உட்கொள்ளும் குணம் கொண்டது.
இவை தனியாக இருந்தால் மிகவும் ஆபத்து. தனியாக இருக்கும் யானை எப்படி ஆபத்தானதோ அதேபோல் இதுவும் தனியாக இருக்கும் போது ஆபத்து வாய்ந்ததாக இருக்கும். இவை அடிக்கடி குழுக்களாக வாழும். ஆனால் மனிதர்களை அவ்வளவாக தாக்குவதில்லை. அதே சமயம் ஆபத்து வந்தால் மிகுந்த ஆற்றலுடன் தாக்கக்கூடியவை.
சிங்கத்தை தான் காட்டின் ராஜா என்று நாம் கூறினாலும்.. இந்திய கௌர் (Indian Gaur) “காட்டின் மன்னன்” என்று அழைக்கப்படுகிறது. ஆனால் காலநிலை மாற்றம் காரணமாக இந்திய கௌர் (Indian Gaur) எண்ணிக்கை குறைந்து வருகிறது. காடுகளில் இந்திய கௌர் தற்போது குறைவாக காணப்படுகிறது, காடுகள் அழிக்கப்படுவதால் மற்றும் இந்திய கௌர் (Indian Gaur) வேட்டையாடப்படுவதால் இதன் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
மத்திய, மாநில வனத்துறை சார்பாக இதை (Indian Gaur) பாதுகாக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த இந்திய கௌர் (Indian Gaur) காட்டு மாடு தஞ்சாவூர் பகுதிகளில் நடமாடியதைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். வனத்துறையினர் மூலம் இந்திய கௌர் எருதை குடியிருப்புகள் பகுதியில் சுற்றும் தகவலறிந்த வனத் துறையினர் ஞானம் நகர், காட்டுத்தோட்டம், மாரியம்மன் கோயில், தளவாய்ப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ட்ரோன் மூலம் காட்டெருமையைத் தேடினர். ஆனால், காட்டெருமை ட்ரோன் பார்வையில் சிக்கவில்லை. இதைத்தொடர்ந்து, மாவட்ட வன அலுவலர் எம். அனந்த குமார் தலைமையில் 20 பேர் அடங்கிய 4 குழுக்கள் அமைக்கப்பட்டு காட்டெருமையைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து வனத் துறையினர் கூறுகையில், ”மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து காவிரி அல்லது கொள்ளிடம் ஆற்றுப் படுகை வழியாக காட்டெருமை வந்திருக்கலாம்காட்டெருமையைப் பிடிக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்தார் .