இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாணவர் அணி மற்றும் முஸ்லிம் மாணவர் பேரவை இணைந்து சமூக நல்லிணக்க மிலாது விழா மற்றும் மாநில அளவிலான பேச்சுப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழாவை நேற்று நடைபெற்றது.
இவ்விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் ஹபிபர் ரஹ்மான் துவக்க உரையாற்றினார். மாநில பொருளாளர் ஷாஜகான் மாநில முதன்மை துணை தலைவர் அப்துல் ரகுமான், மாநில துணைத்தலைவர் முன்னாள் எம்பி நவாஸ் கனி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
மாநில பொதுச் செயலாளர் முகமது அபூபக்கர், பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, தேசிய செயலாளர் அப்துல் பாசித் சமூக நல்லிணக்க உரையாற்றினார்கள்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் காதர் மொகிதின் விழா பெருவையாற்றினார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய தேசிய தலைவர் காதர் மொய்தீன் கூறியதாவது :-
உத்தரகாண்ட் மாநிலத்தில் புது சிவில் சட்டத்தை கடந்த ஜனவரி 27ஆம் தேதி அம் மாநில அரசு அமல்படுத்தியுள்ளது. அது நாற்பது சதவீதம் உள்ள மலை பழங்குடியினருக்கு இந்த சிறு சட்டம் பொருந்தாது எனவும் மற்ற அனைவருக்கும் இந்த பொது சிவில் சட்டம் பொருந்தும் எனவும் அறிவித்துள்ளது. எனவே இந்த புது சிவில் சட்டம் என்பது பொது மதச் சட்டம் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இது இஸ்லாமியர்களுக்கு எதிரான ஒரு சட்டமாக கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே இதனை எதிர்த்து நீதி மன்றத்தில் நாங்கள் வழக்கு தொடர உள்ளோம். குறிப்பாக இஸ்லாமிய பெண்களுக்கு தலாக் பண்ணும்போது கணவன் இறந்து விட்டால் குர்ஆன் சட்டப்படி பல்வேறு நடைமுறைகள் உள்ளது தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள பொது சிவில் சட்டத்தில் இந்த குர்ஆன் சட்டங்களுக்கு எதிரான சட்டங்கள் இடம் பெற்றுள்ளது.
மேலும் இந்த சட்டங்களை மீறினால் கைது செய்யப்படும் மூன்று ஆண்டு சிறை தண்டனை என்ற ஒரு காட்டுமிராண்டித்தனமான சட்டமாக உள்ளது .

அதேபோல் இந்திய பாராளுமன்றத்தில் லோக்சபாவில் வக்பு திருத்த சட்டத்தை கொண்டு வருவதற்கு தொடர்ந்து முயற்சி செய்யப்பட்டு வருகிறது, மேலும் அதில் 44 திருத்தங்கள் செய்யப்பட்டு புதிய சட்டத்தை கொண்டு வர ஒன்றிய அரசு முயற்சி செய்ததோடு இது குறித்த கருத்து கேட்புகளை இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கருத்துரு அனுப்பப்பட்டு கருத்துக்கள் கூறப்பட்ட நிலையில் அதில் 95% மக்கள் இந்த வகுப்பு திருத்த சட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர். இது இஸ்லாமியர்களின் சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான ஒரு முயற்சி. ராணுவம் ரயில்வே போன்ற பொது நிறுவனங்களின் சொத்துக்கள் அனைத்தும் அரசுடையது என்பது போல இஸ்லாமியர்களின் குறிப்பாக வக்புக்கு சொந்தமான சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த வகுப்பு திருத்த சட்டத்தை கொண்டுவர ஒன்றிய அரசு முயற்சிக்கிறது, இதை எதிர்த்தும் நாங்கள் கட்டாயம் நீதிமன்றத்திற்கும் மக்கள் மன்றத்திற்கும் செல்வோம் என்று கூறினார்.
அதேபோல் மும்மொழி கொள்கையை ஏற்க தொடர்ந்து தமிழகத்தை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு தமிழக அரசின் புகழுக்கும் வளர்ச்சிக்கும் கேடு விளைவிக்க இந்த மும்மொழிக் கொள்கையை திட்டமிட்டு திணிப்பது கண்டனத்திற்குரியது எங்களுடைய மாநில பொதுக்குழுவிலும் நாங்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம் என்று கூறினார்.
எனவே தமிழகத்தை பொறுத்தவரை திராவிட கட்சிகள் பாரம்பரியமாக கொண்டு வந்த இரு மொழிக் கொள்கையை தான் எப்போதும் நாம் பின்பற்றுவோம் இதில் தமிழகம் உறுதியான நிலைப்பாட்டுடன் இருக்கும்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திருப்பரங்குன்றத்தை சுற்றி வசிக்கக்கூடிய ஆறு சமுதாயங்களை சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து தங்களுக்குள் எந்தவித பிரிவினையும் பாகுபாடும் பிரச்சனைகளும் இல்லாமல் இன்று வரை நாங்கள் அண்ணன் தம்பி உறவு முறையோடு வாழ்ந்து வருகிறோம் என்று தங்களுடைய கைப்பட எழுதிக் கொடுத்த அந்த கடிதத்தை இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் ஆவணமாக வழங்கப்பட்டுள்ளது. எனவே திருப்பரங்குன்ற விவகாரத்தில் பல மத சக்திகள் அமைதியை குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவதை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இது செயல்பாடுகள் மூலம் தங்களுடைய கட்சியை வளர்ப்பதற்காக பல்வேறு முயற்சிகளை அவர்கள் மேற்கொள்கின்றனர் இதை தமிழக அரசும் ஏற்காது தமிழக மக்களும் ஏற்க மாட்டார்கள்.
இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டில் கலைஞர் அவர்கள் ஏற்கனவே மூன்று புள்ளி ஐந்து சதவீத இட ஒதுக்கீடை வழங்கி உள்ள நிலையில் அதை 5% ஆக உயர்த்தி கொடுத்தால் எங்களுக்கு மகிழ்ச்சி தான்.
இந்தியாவில் மற்ற மாநிலங்கள் ஹிந்தியை ஏற்றுக் கொண்டது போல தமிழகமும் ஏற்றுக் கள்ள வேண்டும் என்று நிர்பந்திக்க காரணம் அவர்கள் இந்தியை வளர்க்க விரும்பவில்லை சமஸ்கிருதத்தை வளர்க்க விரும்புகிறார்கள்.
இஸ்ரேல் நாட்டில் எதிரிய மொழி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட நிலையில் அதை மீண்டும் ஆங்கில வடிவில் பயன்பாட்டிற்கு இஸ்ரேல் நாடு கொண்டு வந்துள்ளது. அதை தான் இன்று அந்நாட்டிலுள்ள 50 லட்சம் மக்களும் பயன்படுத்துகிறார்கள் எனவே அது போன்ற நிலையை சமஸ்கிருதத்திலும் கொண்டுவர திட்டமிட்ட ஒன்றிய அரசு முதல் கட்டமாக மூன்று கிரிமினல் சட்டங்களை சமஸ்கிருதத்தில் கொண்டு வந்து அதை ஆங்கிலத்தில் வடிவமைத்துள்ளது. எனவே சமஸ்கிருதத்தை வளர்க்கவே ஒன்றிய அரசு முயற்சிக்கிறது என்று கூறினார்.
பேட்டியின் போது இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே. ஏ. எம். முகம்மது அபூபக்கர், மாநில பொருளாளர் எம். எஸ். ஏ. ஷாஜகான், மாநில முதன்மை துணைத்தலைவர் எம். அப்துல் ரஹ்மான், மாநில செயலாளர்கள் அப்துல பாசித்,ஆடுதுறை ஷாஜகான், மாநில துணைச் செயலாளர்கள் வி. எம். பாரூக், அப்துல் ரஹ்மான் ரப்பானி, திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் கே. எம். கே. ஹபீபுர் ரஹ்மான், தெற்கு மாவட்ட செயலாளர் சையது ஹக்கீம், வடக்கு மாவட்ட செயலாளர் நிஜாம்தீன், மாநில மாணவரணி தலைவர் அன்சர் அலி உள்ளிட்ட மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தார்கள்