திருச்சியில்
பாலக்கரையை சேர்ந்த பெண்ணிடம் செல்போன் பறித்த இரண்டு வாலிபர்கள் கைது.

திருச்சி பாலக்கரை இருதயபுரம் 2வது தெரு பகுதியை சேர்ந்தவர் சித்ரா (வயது 42 ) இவர் நேற்று ஈரோடு செல்வதற்காக திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்தார்,பின்னர் ஈரோடு பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கு வந்த இரண்டு வாலிபர்கள் சித்ராவின் பையில் இருந்த செல்போனை பறித்து சென்றனர்.
உடனடியாக கூச்சலிட்ட அவர் அருகில் உள்ளவர்கள் அவர்களை துரத்தி சென்று இரண்டு பேரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில்
திருவரங்கம் வசந்த நகர் பகுதி சேர்ந்த விஜய் (வயது25) ,அதே பகுதியை சேர்ந்த நாகராஜன் (வயது27) ஆகிய இருவரை
ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்து அவரிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்தனர்.