திருச்சி ஸ்ரீரங்கம் காந்தி மார்க்கெட் பகுதிகளில் போதை ஊசி, மாத்திரை விற்ற 2 பேர் கைது. இருசக்கர வாகனங்கள், செல்போன், பணம் பறிமுதல் .
திருச்சி ஸ்ரீரங்கம், காந்தி மார்க்கெட் பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை.

போதை ஊசிகள், மாத்திரைகள் விற்ற 2 வாலிபர்கள் கைது.பணம், செல்போன், வாகனங்கள் பறிமுதல் .
திருச்சி மாநகரில் போதை மாத்திரைகள் அதிக அளவில் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து. திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் திருவரங்கம்,காந்தி மார்க்கெட் பகுதியில் அந்தந்த போலீஸ் சரக இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீசார் அதிரடி வேட்டையில் இறங்கினர்.
இதில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் புதுத்தெரு பகுதியில் போதை மாத்திரைகள், போதை ஊசிகள் விற்றதாக வெங்கடேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய சித்தார்த் என்பவரை தேடி வருகின்றனர். கைதானவரிடம் இருந்து 50 போதை மாத்திரைகள், சிரஞ்சு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவரிடம் இருந்து ரூ 6300 பணம், செல்போன், இருசக்கர வாகனம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது .
இதே போல் வடக்கு தாராநல்லூர் பகுதியில் இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் சூர்யா என்கிற சூரியமூர்த்தி என்கிற வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 50 போதை மாத்திரைகள் மற்றும் இரு சக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் போதை மாத்திரைகள், போதை ஊசிகள் விற்றால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல்துறையினர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.