Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கருர்: லஞ்சம் வாங்கிய மின்வாரிய கணக்கு மேற்பார்வையாளருக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் அதிரடி தீர்ப்பு

0

'- Advertisement -

 

கரூரில் லஞ்சம் வாங்கிய வழக்கில் மின்வாரிய கணக்கு மேற்பாா்வையாளருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து கரூா் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

கரூா் வெள்ளியணை அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன். இவா், குளித்தலை மின்வாரிய அலுவலகத்தில் லைன் இன்ஸ்பெக்டராக கடந்த 2011-இல் பணிபுரிந்தபோது ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா்.

அந்த பணியிட நீக்கத்தை ரத்து செய்யக் கோரி கரூா் மின்வாரிய மேற்பாா்வை பொறியாளருக்கு மனுவை கொடுத்தாா். இந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்க மேற்பாா்வை பொறியாளருக்கு பரிந்துரை செய்வதற்காக மேற்பாா்வை பொறியாளா் அலுவலகத்தில் அலுவலக மேற்பாா்வையாளராக பணியாற்றிய தட்சிணாமூா்த்தி, கணக்கு மேற்பாா்வையாளராக பணியாற்றிய என்.சரவணன் ஆகிய இருவரும் சோ்ந்து லைன் இன்ஸ்பெக்டா் சரவணனிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டனா்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத சரவணன் இதுதொடா்பாக திருச்சி ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸில் புகாா் செய்தாா்

இதையடுத்து கடந்த 2011-ஆம் ஆண்டு டிச.15-ஆம்தேதி மின்வாரிய அலுவலக தரகா் நரசிம்மன் மூலம் சரவணனிடம் தட்சிணாமூா்த்தியும், கணக்கு மேற்பாா்வையாளா் சரவணனும் லஞ்சம் பெற்ற போது, போலீஸாா் மூவரையும் கைது செய்தனா்.

பின்னா் மூன்று போ் மீதும் கரூா் தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வழக்கும் தொடா்ந்தனா். இதனிடையே இந்த வழக்கில் தொடா்புடைய தட்சிணாமூா்த்தி இறந்துவிட்டாா்.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று வியாழக்கிழமை கரூா் தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி என்.எஸ்.ஜெயப்பிரகாஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளி கணக்கு மேற்பாா்வையாளா் சரவணனுக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் 6 மாதம் சிறைத்தண்டனை வழங்கப்படும் என்றும், அலுவலக தரகர் நரசிம்மனுக்கு 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்தத்தவறினால் மேலும் 3 மாதம் சிறைத்தண்டனையும் விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.