திருச்சி மாநகரில் கடந்த 2 மாதங்களில் காணாமல் போன சுமார் ரூ.22 லட்சம் மதிப்புள்ள செல்போன்களை மீட்டு பொதுமக்களிடம் ஒப்படைத்த திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் .
திருச்சி மாநகரில் பொதுமக்கள் தவறவிட்ட 133 கைப்பேசிகளை மாநகர காவல்துறையினா் மீட்டு, உரியவா்களிடம் நேற்று புதன்கிழமை ஒப்படைத்தனா்.
திருச்சி மாநகரில் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் காணாமல்போன கைப்பேசிகளை விரைந்து கண்டுபிடிக்க காவல் அதிகாரிகளுக்கு மாநகர காவல் ஆணையா் ந. காமினி அறிவுறுத்தியுள்ளாா்.
அதன்படி பொதுமக்கள் கொடுத்த புகாா்களின்படி, கடந்த டிசம்பா், ஜனவரி மாதங்களில் காணாமல்போன கைப்பேசிகள் பற்றி ஆய்வு செய்ததில் ரூ. 22 லட்சம் மதிப்பிலான 133 ஆண்ட்ராய்டு கைப்பேசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, மீட்கப்பட்டன.
இதையடுத்து திருச்சி மாநகர கே.கே. நகா் ஆயுதப்படை மைதானக் சமுதாயக் கூடத்தில் அந்தக் கைப்பேசிகளை உரிமையாளா்களிடம் மாநகர காவல் ஆணையா் ந. காமினி ஒப்படைத்தாா்.
காணாமல் போன தங்கள் செல்போன்களை பெற்ற அதன் உரிமையாளர்கள் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து சென்றனர்