திருச்சி அரியமங்கலத்தில்
போதை மாத்திரைகள்
விற்ற 2 பேர் கைது.
ஊசிகள், மாத்திரைகள் பறிமுதல்.

திருச்சி அரியமங்கலத்தில் போதை மாத்திரைகள் விற்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி, அரியமங்கலம், மலையப்பநகர் அருகே போதை பொருள் விற்பனை நடப்பதாக அரியமங்கலம் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த 2 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவ்விருவரும் அரியமங்கலம், மலையப்ப நகர், அண்ணா தெருவைச் சேர்ந்த மதன் (வயது 40) மற்றும் குமார் (27) என்பதும், அவர்கள் போதை மாத்திரை விற்றதும் தெரியவந்தது.
அந்த 2 பேரையும் அரியமங்கலம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 60 போதை மாத்திரை, 2 போதை ஊசி மற்றும் 2 தண்ணீர் பாட்டில்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர் .