திருச்சியில் இன்று புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு மோட்டார் வாகன ஆலோசகர்கள் உரிமை கேட்டு போராட்டம்.
திருச்சியில் இன்று நடந்தது:
மோட்டார் வாகன ஆலோசகர்கள் உரிமை கேட்டு போராட்டம்
500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு.
ஆன்லைன் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் 500க்கும் மேற்பட்டோர் போராட்டம்
ஆன்லைன் அபராத முறையினை ரத்து செய்து பழைய முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்,
ஹெல்மெட் அபராதம் ஆயிரமாக உயர்த்தியதை மாற்றி அமைக்க வேண்டும்,
ஜிஎஸ்டி வரியை மத்திய மாநில அரசுகள் திணிக்க கூடாது,
ஆர்டிஓ அலுவலகங்களில் உள்ள நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும்,
வாகன ஓட்டிகளுக்கு தெரியாமல் அபராதம் விதிக்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்,
அஞ்சல் மூலம் ஆர்சி புக் அனுப்புவதை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி உழவர் சந்தை பகுதியில் தமிழ்நாடு மோட்டார் வாகன ஆலோசகர்கள் நலச்சங்கம், இருசக்கர வாகன பழுது நீக்குவோர் நலச் சங்கம், திருச்சி மாவட்ட ராக் சிட்டி ஆட்டோ கன்சல்டிங் வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் இன்று உரிமை கேட்ப போராட்டம் நடைபெற்றது. மோட்டார் வாகன ஆலோசகரின் நலச் சங்கத்தின் மாநில தலைவர் அறிவழகன் மாநில செயலாளர் ஜமால் முகமது மாநில பொருளாளர் சேகர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட தலைவர் எஸ். பி .பாபு,
மாநில துணைத்தலைவர் ராஜா,திருச்சி மாவட்ட தலைவர் சுகந்தி ராஜா, மாவட்ட செயலாளர் அர்ஜுனன், செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார்,பஜார் மைதீன் உள்பட
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து மாநில ஆலோசகர்கள், மாநிலத் துணைத் தலைவர்கள் , மாநில செயலாளர், மாவட்ட கிளை சங்க நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் , வியாபாரிகள் பொதுமக்கள் என
500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினர்.