Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபர் குண்டர் சட்டத்தின் கீழ் மீண்டும்கைது

0

'- Advertisement -

Ad banner

கரூா் வெங்கமேட்டைச் சோ்ந்த தங்கராஜ் மகன் காா்த்திக் (வயது 24). இவா் கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி கரூா் குளத்துப்பாளையத்தில் வசித்து வரும் பீகாா் மாநிலம், பக்ரா கிராமத்தைச் சோ்ந்த அமா்குமாா் (வயது 22) என்பவரிடம் பணம் மற்றும் செல்போனை கத்தியைக்காட்டி மிரட்டி பறித்துச் சென்றாராம்.

இந்த புகாரின் பேரில், வெங்கமேடு போலீஸாா் காா்த்திக்கை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில் காா்த்திக் மீது ஈரோடு மாவட்டம், பெருந்துறை காவல்நிலையம் உள்ளிட்ட காவல்நிலையங்களில் வழிப்பறி கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவரை குண்டா் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க எஸ்.பி கே. பெரோஸ்கான் அப்துல்லா மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேலுக்கு பரிந்துரை செய்தாா்.

இதையடுத்து ஆட்சியரின் உத்தரவின்படி காா்த்திக் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.