திருச்சி துவாக்குடி அரசு கலைக் கல்லூரி துறை தலைவர் பேராசிரியைக்கு பாலியல் தொந்தரவு. கைது செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம் .
திருச்சி துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில் புவியியல் துறையில் பணியாற்றி வரும் துறை தலைவரான சரவணகுமார் என்பவர் மாணவர்களை ஜாதி ரீதியாக பிளவுபடுத்தும் வேலையை பார்க்கிறார் என்பதற்காக கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் இருந்து பல்வேறு கல்லூரிகளுக்கு அவர் அனுப்பப்பட்டார்,
இவர் எட்டு மாதத்திற்கு முன்பு துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில் புவியியல் துறையின் தலைவராக பணியேற்று கொண்டார் இந்நிலையில் இவர் வருவதற்கு முன்பாக அத்துறையில் பணியாற்றிய பாத்திமா என்னும் பேராசிரியருடன் இருவருக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது சரவணகுமார் துறை தலைவர் என்பதால் பேராசிரியர் பாத்திமாவை
ஒருமையில் பேசுவதும், பாலியல் ரீதியான சொற்களை உச்சரிப்பதும், பாலியல் அத்துமீறல்களை இவர் செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து பாத்திமா திருவரும்பூர் காவல் நிலையத்தில் சரவணன் மீது பாலியல் புகார் அளித்தார்.
இதனால் சரவணன் பாத்திமா ஒழுங்காக வகுப்புகள் எடுப்பது கிடையாது ஒழுங்காக கல்லூரிக்கு வருவதும் கிடையாது எனவே பாத்திமா பணி விலக வேண்டும் என மாணவர்களை பயன்படுத்தி தன்னுடைய பாலியல் புகாரை மறைத்துக் கொள்ள மாணவர்களை போராடத் தூண்டி ஜாதி ரீதியான மாணவர்களை ஒருங்கிணைத்து அவர்களை போராட்டம் செய்ய தூண்டி உள்ளார்.
இந்திய மாணவர் சங்கத்தினர் மாணவர்களுக்கு சரியாக பாடம் எடுக்காத பாத்திமா பேராசிரியரை கல்லூரியில் இருந்து வெளியேற்றவும், மாணவர்களை ஜாதி ரீதியாக பிளவுபடுத்தி போராடத் தூண்டிய சரவணனை கைது செய்ய வேண்டும் எனவும் இந்தியா மாணவர் சங்கத்தினர் இன்று போராட்டத்தில் இறங்கினர்.
இந்த போராட்டத்திற்கு கிளை செயலாளர் துளசிராம் தலைமை தாங்கினார், மாநில இணை செயலாளர் ஜிகே மோகன், மாவட்டச் செயலாளர் ஆமோஸ், மாவட்டத் தலைவர் வைரவளவன், ஆகியோர் கண்டன உரையாற்றினர், போராட்டத்தின் முடிவில் மாவட்ட குழு உறுப்பினர் ராஜேஷ் போராட்ட முடிவுரை ஆற்றினார் .