திருச்சியில் அப்பம்பட்டு ஸ்வீட்ஸ் முட்டை மிட்டாய் கடையின் புதிய கிளையை அப்துல் சமது எம்எல்ஏ திறந்து. வைத்தார்
திருச்சியில் முட்டாய்களுக்கு என பிரத்யோக மிட்டாய் கடை. சையத் ஸ்வீட்ஸ் முட்டை மிட்டாய் கடை புதிய கிளை திறப்பு விழா.
விழுப்புரம் மாவட்டத்தின் அடையாளமான அப்பம்பட்டு சையத் ஸ்வீட்ஸ் முட்டை மிட்டாய் கடை 55 ஆண்டு பாரம்பரியமிக்கது. இந்த கடையின் புதிய கிளை திருச்சி சத்திரம் பஸ்நிலையம் சிந்தாமணி பஜாரில் பிரண்ட் லைன் மருத்துவமனை அருகே உள்ள எஸ்.வி.வி.
காம்ப்ளக்ஸில் அமைக்கப் பட்டுள்ளது. இந்த புதிய கிளையை மணப்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
அப்துல் சமது சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு திறந்து வைத்ததுடன் முதல் விற்பனையையும் தொடங்கி வைத்தார்.
இக்கடையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் அனைத்து வகை தரமான மிட்டாய்களும் விற்பனைக்கு உள்ளது. உள்ளூர் கடலை மிட்டாய் முதல் வெளிநாட்டு ஒரிஜினல் காபி சாக்லேட் மற்றும் வெளிநாட்டு பேரிச்சம்பழம் ஏற்றுமதி பாதாம் முந்திரி போன்ற வகைகளும் இங்கு கிடைக்கும் என இக்கடையின் உரிமையாளர் தெரிவித்தார் .
கடை உரிமையாளர் சையத் உஸ்மான் திறப்பு விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் வரவேற்றார் .
நிகழ்ச்சியில் மனிதநேய மக்கள் கட்சி கிழக்கு மாவட்ட தலைவர் முகமது ராஜா , மேற்கு மாவட்ட செயலாளர் பைஸ் அஹமத் , மாவட்ட செயலாளர் அசரப் அலி , பொருளாளர் காஜா மைதீன் , தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் நசீர் , தலைமை செயற்குழு உறுப்பினர் சபீர், முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக நிறுவன தலைவர் இடிமுரசு இஸ்மாயில் உள்பட மனிதநேய கட்சியை சேர்ந்த கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் திரளாக புதிய கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் .