தமிழக சட்டபேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக சட்ட சபை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கீழ்பெண்ணாத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.பிச்சாண்டியை தற்காலிக பேரவை தலைவராக கவர்னர் நியமித்துள்ளார்.
இதையடுத்து கு.பிச்சாண்டி நாளை (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு கவர்னர் முன்பு உறுதிமொழி அல்லது பற்றுறுதி எடுத்துக் கொள்வார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தற்காலிக சபாநாயகரான கு.பிச்சாண்டி கவர்னர் மாளிகைக்கு சென்று உறுதி மொழி எடுத்துக் கொள்கிறார்.
தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள கு.பிச்சாண்டி, நாளை மறுநாள் கூடும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சபாநாயகராக செயல்படுவார். அப்போது புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அவர் பதவி பிரமாணம் செய்து வைப்பார்.