மக்கள் நலனை அக்கறை இல்லாத திமுக அரசை கண்டித்து 2025-ம் ஆண்டு முழுவதும் தொடர் போராட்டம் நடத்த திருச்சி மாவட்ட அமமுக முடிவு.
மக்கள் நலனில் அக்கறை காட்டாத அரசு நிர்வாகங்களை கண்டித்து 2025-ம் ஆண்டு முழுவதும் தொடர் போராட்டம் நடத்த திருச்சி மாநகர் மாவட்ட அமமுக முடிவு.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொது செயலாளர், டிடிவி தினகரனின் ஆணைக்கிணங்க திருச்சி மாநகர் மாவட்ட ஆலோசனை கூட்டம்,
திருச்சி மாநகர் மாவட்ட இணை செயலாளர் வண்ணை லதா தலைமையில்,
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ப .செந்தில்நாதன் முன்னிலையில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது,
இக்கூட்டத்தில், கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது:
1. டிடிவி தினகரனின் பிறந்த நாள் விழாக்கள் மற்றும் கட்சி கொடி ஏற்றுதல் தொடர்பாகவும் , 2024-ம் ஆண்டு முழுவதும் சிறப்பான முறையில் செயல்பட்ட நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தல்.
2. அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளார் டிடிவி தினகரன் அவர்களின் திருச்சி வருகை (ஜனவரி 5) குறித்தும், அதற்கான சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது .
3. திருச்சியில் வருகின்ற 2025 ஆண்டு தொடங்கி, ஆளும் திறனற்ற, அடக்குமுறை திமுக அரசு மற்றும் நிர்வாகங்களை எதிர்த்து தொடர் போராட்டங்கள் நடத்துவது குறித்து இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் தன்சிங், ஹேமலதா,
மாநில நிர்வாகி பஷீர் அகமத்,
பகுதி மற்றும் ஒன்றிய செயலாளர்கள் கல்நாயக் சதீஷ்குமார், கம்ருதீன், வேதாந்திரி நகர் பாலு, உமாபதி, வெங்கட்ரமணி, மதியழகன், இளையராஜா, கருப்பையா, இளங்கோவன், குப்புசாமி, அனலை சங்கர்,
சார்பு அணி செயலாளர்கள்
வக்கீல் பிரகாஷ், நாகூர் மீரான், சாந்தா, ஜான் கென்னடி, நல்லம்மாள், தருண், கோமதி மங்கை, கல்லணை குணா, செந்தில்குமார், ராமலிங்கம்,
மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் வரும் ஜனவரி 5 ஆம் தேதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்
திருச்சி வருகை ஒட்டி, அவர்களுக்கு மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் எவ்வாறு வரவேற்பு அளிப்பது பற்றியும்,
தொகுதி வாரியாக நிர்வாகிகள் செயல்பாடுகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.