ரூ.64 லட்சத்தை ஆன்லைனில் இழந்த தோட்டக்கலை உதவி இயக்குனர். அதிக பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டதால் வந்த வினை . குஜராத்தை சேர்ந்த 2 பேர் கைது.
பெரம்பலூர் அருகே உள்ள அய்யலூரைச் சேர்ந்தவர் செல்வகுமாரி இவர் தோட்டக்கலை இயக்குநர் அலுவலகத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.
தான் அரசு அதிகாரியாக பணியாற்றிய போதும் அதிக பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு ஆன்லைன் டிரேடிங் மூலம் அதிக லாபம் ஈட்டுவதாக இன்ஸ்டாகிராம் ஆப்பில் கிடைத்த தகவலை நம்பி ரூ.63 லட்சத்து 87 ஆயிரம் முதலீடு செய்து தான் ஏமாற்றப்பட்டதாக போலீசில் பெரம்பலூர் பிரிவில் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தீவிர விசாரணை நடத்திய பெரம்பலூர் சைபர் கிரைம் பிரிவு போலீஸார், செல்வக்குமாரை ஏமாற்றிய நபர்கள் உள்ளனர் என்பதை அறிந்து குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்துக்குச் சென்று அங்கு சர்மா சுனில் குமார், சர்மா பன்சிலால் ஆகிய இருவரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரம் ரொக்கம், 4 செல்போன்கள், 5 சிம்கார்டுகள், 7 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட இருவரையும் குஜராத் மாநிலம் வதோதரா நீதிமன்றத்தில் தமிழக போலீசார் ஆஜர்படுத்தினர். பின்னர், பெரம்பலூர் அழைத்து வரப்பட்டு வேப்பந்தட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, இருவரும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.
அரசு அதிகாரியாக பணியாற்றும் செல்வகுமாரிக்கு ரூ.64 லட்சம் பணம் எங்கிருந்து வந்தது.