Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஸ்ரீரங்கம் கோவிலில் நியமிக்கப்படாத அறங்காவலர் குழு அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சியில் அமைச்சர் சேகர்பாபு பேட்டி .

0

'- Advertisement -

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் வழக்கு விவகாரம்.

ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய குழு அமைக்கப்படும்.

திருச்சியில் இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி.

திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் உள்ளிட்ட ஐந்து திருக்கோயிலில் பயன்பாட்டில் இல்லாத பிரித்தெடுக்கப்பட்ட 542 கிலோ எடையுள்ள
பல மாற்று பொன்
இனங்களை
உருக்கி தங்க
முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்யும் வகையில், . திருச்சி சமயபுரம் கோவிலில் இருந்து மும்பை பாரத ஸ்டேட் பேங்க் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது .

உச்ச நீதிமன்ற நீதியரசர் துரைசாமி ராஜு, கே.ரவிச்சந்திர பாபு,
மாலதி ஆகியோர் முன்னிலையில் அமைச்சர்கள் கே.என்.நேரு,
பி. கே. சேகர்பாபு ஆகியோர் எஸ்பிஐ வங்கி அதிகாரிகளிடம் தங்கத்தை
ஒப்படைத்தனர்.

தமிழகத்தில் உள்ள
சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட
5 கோவில்களில்
கடந்த 10 ஆண்டுகளில் காணிக்கையாக வரப்பெற்ற தங்க ஆபரணங்களில், கோவிலுக்கு தேவைப்படுபவை தவிர, மற்றவற்றை மும்பையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான தங்கம் உருக்காலையில் உருக்கி, சொக்கத் தங்கமாக மாற்றி, கோவிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வங்கியில் முதலீடு செய்யப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்திருந்தார்
இந்தப் பணிகளுக்காக அறநிலையத் துறை சார்பில் தமிழகம்
3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு,
உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள்
துரைசாமி ராஜு, கே.ரவிச்சந்திர பாபு ,
மாலதி அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவினர், கோவில்களுக்குச் சென்று காணிக்கை தங்கங்களில் உள்ள அழுக்கு, அரக்கு, கற்கள் ஆகியவற்றை அகற்றி, தூய்மைப்படுத்தி தரம் பிரித்து, அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்பணி
நிறைவு பெற்ற நிலையில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் உள்ளிட்ட ஐந்து கோவில்களில் பயன்பாட்டில் இல்லாத பிரித்தெடுக்கப்பட்ட 541 கிலோ 781 கிராம் எடையுள்ள பல மாற்று பொன் இனங்களை,
கோவிலுக்கு தேவைப்படும் நகைகளை தவிர மற்ற தங்கத்தை முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்திடும் வகையில் பாரத ஸ்டேட் வங்கி மூலம் இன்று மும்பைக்கு தங்கம் அனுப்பி வைக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற சட்டத்தின் அடிப்படையில்
கோவில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்
பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் உச்சநீதிமன்றம் அர்ச்சகர் நியமனத்திற்கு தடை விதித்துள்ளது.
அந்த வழக்கை விரைந்து முடித்து தமிழக அரசுக்கு சாதகமாக தீர்ப்பை பெற ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய குழுவினர் நியமிக்கப்பட உள்ளனர்.

சென்னை திருப்போரூரில் உண்டியலில் பக்தர் ஒருவர் தவறவிட்ட செல்போன் விவகாரம் இன்னும் ஓரிரு நாட்களில் முடிவுக்கு வரும்.

திருவரங்கம் அரங்கநாத சாமி கோவிலில் இது நாள் வரை நியமிக்கப்படாத அறங்காவலர் குழு விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன், இந்து சமய அறநிலை துறை ஆணையர் ஸ்ரீதர், சமயபுரம் கோயில் இணை ஆணையர் பிரகாஷ், இணை ஆணையர்கள் கோவில் பணியாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.