திருச்சி பீமநகரில் என்ஜினீயர், வழக்கறிஞர், அலுவலகங்கள், டெய்லர் கடைலும் கொள்ளை. மர்ம நபர்களுக்கு வலை.
திருச்சி பீமநகரில்
என்ஜினீயர், வழக்கறிஞர் அலுவலகங்களில் கொள்ளை.
டெய்லர் கடையிலும் மர்மநபர்கள் கைவரிசை.
திருச்சி பீம நகரில் இன்ஜினியர், வழக்கறிஞர் அலுவலகங்கள் மற்றும் டெய்லர் கடையிலும் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பொருட்களை திருடி சென்றனர்.
இந்த துணிகரச் சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
திருச்சி,
பீம நகர்,
ஹீபர் சாலையில்
ஒரு தனியார் வணிக வளாகம் உள்ளது. இதில்
கரூரைச் சேர்ந்த இன்ஜினியர் பழனி வேலு( வயது 32) என்பவருக்கு சொந்தமான கட்டுமான அலுவலகம் உள்ளது. நேற்று வழக்கம்போல் அவர் அலுவலகத்தை பூட்டி விட்டு சென்றார்.
இந்த நிலையில் மர்ம நபர்கள் அவரது அலுவலக
பூட்டை உடைத்து
லேப்டாப்பை திருடி சென்று விட்டனர்.
இதேபோன்று அந்த வணிக வளாகத்தில் டெய்லர் கடை நடத்தி வரும் அமுதா என்பவரது கடை மற்றும் வழக்கறிஞர் ஆனந்த் அலுவலக பூட்டுகள் உடைக்கப்பட்டு
கொள்ளை முயற்சி நடந்துள்ளது.
இது குறித்து பழனிவேலு செசன்ஸ் கோர்ட் போலீசில் புகார் செய்தனர்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.