திருச்சியில்
வாலிபருக்கு போதை மாத்திரை விற்பனை செய்த ரவுடி கைது.
திருச்சி பெரிய மிளகு பாறை பொதுத்தேர்வு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் இவரது மகனுக்கு திருச்சி பொன் நகர் புது செல்வநகர் பகுதியைச் சேர்ந்த ரவுடி செல்வம் என்கிற வல்லரசு (வயது 35) என்பவர் போதை மாத்திரை விநியோகம் செய்து உள்ளார்.
இதைனை அறிந்து அந்த வாலிபரின் தாயார் ராஜேஸ்வரி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து செசன்ஸ்கோர்ட் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் ரவுடி வல்லரசை கைது செய்தனர்.
பின்னர் அவரிடமிருந்து 10 போதை மாத்திரைகள் மற்றும் ரூபாய் 5 ஆயிரத்து 900 ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.