Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க காயல் அப்பாஸ் வேண்டுகோள்

0

*முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் : காயல் அப்பாஸ் வலியுறுத்தல் !*

முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.

தமிழகத்தில் கோரோனா என்கிற கொடிய வைரஸ்னால் பலர் இறந்துள்ளனர், மேலும் பொது மக்கள் பெரும் அளவில் பாதிக்க பட்டு வருகின்றனர். கோரானா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளது . மேலும் கோரோனா பரவலை தடுத்து மக்களை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு போட பட்ட ஊரடங்கு உத்தரவுக்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஜனநாயக மக்கள் கழகம் சார்பாக கேட்டு கொள்கிறோம்.

தமிழகத்தில் சலூன் கடை , பியூட்டி பார்லர்கள் இயங்க தமிழக அரசு அனுமதி அளிக்காதனால் சலூன் கடை , மற்றும் பியூட்டி பார்லர்களை நம்பி தொழில் செய்து வரும் தொழிளார்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்க பட்டுள்ளனர்.

சலூன் கடை ,மற்றும் பியூட்டி பார்லர்களை தொழிளார்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு விதி முறைகளுடன் சலூன் கடை மற்றும் பியூட்டி பார்லர்கள் இயங்க தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது .

எனவே : வாழ்வாதாரம் பாதிக்க பட்டுள்ள சலூன் கடை , மற்றும் பியூட்டி பார்லர்களின் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் உடனடியாக தமிழக அரசு வழங்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பாக வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.