பண கஷ்டம்.திருச்சி காந்தி மார்க்கெட்
காய்கறி வியாபாரி தூக்குப்போட்டு சாவு.
திருச்சி காந்தி மார்க்கெட் காய்கறி வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் .
இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு.
திருச்சி வடக்கு தாரநல்லூர் வசந்த நகரை சேர்ந்தவர் வைத்தீஸ்வரன் இவரது மகன் செல்வராஜ் (வயது 35). இவர் காந்தி மார்க்கெட்டில் சொந்தமாக காய்கறி கடை வைத்துள்ளார். இவருக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது சோனியா என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர் பணக் கஷ்டத்தில் இருந்த செல்வராஜ் திடீரென வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது சகோதரர் உதயகுமார் கொடுத்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமாரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
காந்தி மார்க்கெட் காய்கறி வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வியாபாரிகள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் அடையாளம் தெரியாத பெண் பிணம்.போலீஸார் விசாரணை.
திருச்சி அரசு மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இந்த மருத்துவமனை வளாகத்தில் உள்ள டீக்கடை அருகில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் ஒன்று கிடந்தது இதை பார்த்த தூய்மைப் பணியாளர் ஒருவர் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார் பின்னர் திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து தெரியவில்லை இது குறித்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சியில்
96 மது பாட்டில்களுடன் வாலிபர் கைது. இருசக்கர வாகனம் பறிமுதல் .
ஊரடங்கு கட்டுப்பாடுகளை பயன்படுத்தி திருச்சியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது, இதையடுத்து கண்டோன்மெண்ட் போலீசார் சப் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் தலைமையில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர் அப்போது திண்டுக்கல் மெயின் ரோடு ஜங்ஷன் ஆல்பா நகர் பகுதியில் சோதனை மேற்கொண்ட போது மோட்டார் சைக்கிளில் வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது அந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர் விசாரணையில் மண்டபத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி என்பதும் அவரிடம் 96 மதுபாட்டில்கள் இருந்ததும் தெரியவந்தது மது பாட்டில்களையும் இரு சக்கர வாகனத்தையும் போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
திருவானைக்காவலில்
வாலிபரிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு
ரவுடி கைது
திருவானைக்காவல் தாகூர் தெருவை சேர்ந்தவர் அழகர்சாமி இவரது மகன் கார்த்திக் lவயது 27).
இவர் ட்ரெயின் ரோட்டில் உள்ள ஒரு பிரியாணி கடைக்கு பார்சல் வாங்கிச் சென்றார் அப்போது டாஸ்மாக் கடை அருகில் ஒருவர் இவரை வழிமறித்து கத்திமுனையில் பணத்தை பறித்து சென்று விட்டார்.
இது குறித்த புகாரின் பேரில் திருவரங்கம் சிங்கர் கோவில் தெருவைச் சேர்ந்த கரிகரன் என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பது தெரிய வந்தது போலீசார் அவரை கைது செய்து பின்னர் சிறையில் அடைத்தனர்.